Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேன்ஸ் கிளம்பிய ஆர்யா, ஜெயம் ரவி

17 மே, 2017 - 09:59 IST
எழுத்தின் அளவு:
Arya---Jayam-ravi-fly-to-Cannes

தமிழ்த் திரையுலகின் மிகப் பெரும் படைப்பாக உருவாக இருக்கும் 'சங்கமித்ரா' சரித்திரப் படத்தின் துவக்க விழா, கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. இதற்கான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக படக்குழுவினர் கேன்ஸ் புறப்பட்டுச் சென்றுள்ளனர். படத்தின் நாயகர்கள் ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோரும் இப்போது சென்றுள்ளனர்.


மேலும் படத்தின் இயக்குனர் சுந்தர்.சி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், படத்தின் நாயகி ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ரெட் கார்பெட்டிலும் கலந்து கொள்கிறார்கள். ஒரு தமிழ்த் திரைப்படத்தின் ஆரம்பம், உலகப் புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.


இந்தப் படத்தில் நாயகர்களாக நடிப்பதற்கு விஜய், சூர்யா உள்ளிட்ட பலரிடமும் பேசினார்கள். ஆனால், அவர்கள் இந்தப் படத்தில் நடிப்பதற்கு மறுத்துவிட்டனர். அதன் பிறகே ஆர்யா, ஜெயம் ரவி ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். 'பாகுபலி 2' படத்தில் நடிப்பதற்கும் முதலில் தெலுங்கு, ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களிடம் தான் கேட்டார்கள். அவர்கள் மறுத்ததால் தான் பிரபாஸ், ராணா போன்றவர்களை நடிக்க வைத்தார்கள். இன்று அவர்கள் உலகப் புகழ் பெற்று விட்டார்கள். அப்படித்தான் 'சங்கமித்ரா' படத்தில் நடிக்க உள்ள ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் புகழ் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.


விமானப் பயணத்தின் செல்பி புகைப்படங்களை ஆர்யா, ஜெயம் ரவி டிவிட்டரில் வெளியிட்டுள்ளனர். அதில் ஜெயம் ரவி, தன் மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் படத்தை மட்டும் முதலில் வெளியிட்டார். அதற்கு ஆர்யர், “உங்களுக்கு சீட்டு கொடுத்ததே நான் தான், புகைப்படத்தில் நான் எங்கே?, கேன்ஸில் எனது உதவி தேவைப்படும்,” எனக் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, “கேன்ஸில் எங்களை அடிக்கடி தொந்தரவு செய்யப் போவது ஆர்யா தான், இருந்தாலும் எங்களது டார்லிங் ஆர்யா,” என்றார். அதற்கு ஆர்யா, “கவலைப்படாதீங்க, சீக்கிரமே யாராவது ஒருத்தரைக் கண்டுபிடிக்கிறேன், அப்புறம் உங்களை நிம்மதியா இருக்க விடுறேன்,” எனக் கிண்டலடித்துள்ளார்.


ஆக, ஆர்யாவுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்க வாய்ப்புள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in