இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அண்மையில் வெளிவந்த எங்கம்மா ராணி படத்தில் தன்ஷிகா நடித்த வேடத்தில் முதலில் அணுகியது அமலாபாலைத்தான். இரண்டு குழந்தைகளுக்கு அம்மா வேடம் என்றதும் நடிக்க மறுத்துவிட்டாராம். அம்மா வேடத்தில் நடித்தால் தொடர்ந்து அம்மா வேடத்தில் நடிக்க அழைப்பார்கள் என்று பயந்துவிட்டாராம் அமலாபால்.
இந்த பயம் நயன்தாராவுக்கு இல்லை. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா உடன் இணைந்து நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் 4 வயது குழந்தைக்கு தயாக நடித்து வருகிறார் நயன்தாரா. த்ரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளரான அனுராக் காஷ்யாப் வில்லனாக நடிக்கிறார். ராஷி கன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
'இமைக்கா நொடிகள்' படத்தின் வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளநிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர். அதாவது இமைக்கா நொடிகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை 17-5-17 அன்று மாலை 7 மணிக்கு வெளியிடுகின்றனர். அதற்கு அடுத்த நாள் அதாவது 18-5-17 மாலை 7 மணிக்கு டீஸரை வெளியிடவிருக்கிறார்கள். ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை 24 மணிநேர இடைவெளியில் அடுத்தடுத்த நாட்களில் வெளியிடுவது ஏன் என்பது தெரியவில்லை.