விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் கஜோல். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த கஜோல், நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையில் இணைந்தார். திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பு போன்றவற்றால் நடிப்பதையும் சில காலம் தவிர்த்துவிட்டார். தற்போது குழந்தைகள் சற்று பெரியவர்களாகிவிட்டதால் மீண்டும் நடிக்க தொடங்கியிருக்கிறார். தமிழில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி-2 படத்தில் நடித்திருக்கிறார். இதுதவிர ஹிந்தியில் ஒரு படத்தில் முன்னணி ரோலில் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், தன்னுடைய இல்வாழ்க்கை எப்படி சிறப்பாக செல்கிறது என்பதை பற்றி கூறியிருக்கிறார் கஜோல். அதில், "பொதுவாக நான் நிறைய பேசுவேன், அஜய் அப்படி பேச மாட்டார். நான் சொல்வதை அமைதியாக கேட்பார். அதனால் தான் எங்களது வாழ்க்கை வெற்றிகரமாக செல்கிறது என்று நினைக்கிறேன். அதுமட்டுமல்ல நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் போன்று தான் உள்ளோம்" என்று கூறியுள்ளார்.