பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி 2 திரைப்படம் வெளிவந்த நாளிலிருந்தே ஒவ்வொரு நாளும் படத்தின் வசூல் பற்றிய தகவல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்தத் தகவல்கள் அனைத்துமே ஆச்சரியப்படும் அளவிற்கு இருக்கின்றன. 1350 கோடி ரூபாயைக் கடந்து இந்த வாரத்திற்குள்ளாக 1500 கோடி ரூபாயை இந்தப் படத்தின் வசூல் கடக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களில் வெளிநாடுகளில் மட்டும் இப்படத்தின் வசூல் 250 கோடி ரூபாயைத் தொட்டுள்ளது. அதில் அமெரிக்காவிலிருந்து மட்டும் 125 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும சுமார் 20 மில்லியன் யுஎஸ் டாலர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் 9 மில்லியன் டாலர்களும், ஆசிய நாடுகளில் 6 மில்லியன் டாலர்களும், ஐரோப்பிய நாடுகளில் 3.5 மில்லியன் டாலர்களும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் 6 மில்லியன் டாலர்களும், வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இரண்டு வாரங்களைக் கடந்த பின்னரும் பல வெளிநாடுகளில் படத்திற்கு இன்னும் வரவேற்பு உள்ளதால் வரும் வார இறுதி வசூல் மூலம் 50 மில்லியன் யுஎஸ் டாலர்களை இப்படத்தின் வசூல் தாண்டும் என்கிறார்கள்.