தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஸ்ருதிஹாசன், ஜெயம் ரவி, ஆர்யா மற்றும் பலர் நடிக்க உள்ள 'சங்கமித்ரா' படத்தின் ஆரம்ப விழா நாளை ஆரம்பமாக உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடக்க உள்ளது. கேன்ஸ் விழாவின் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் 'சங்கமித்ரா' படக்குழுவினர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.
உலக அளவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழாவும் முக்கியமான ஒன்று. இந்திய நட்சத்திரங்கள் பலர் ரெட் கார்ப்பெட் நிகழ்வில் இந்த ஆண்டும் பங்கு கொள்ள உள்ளார்கள். ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
கேன்ஸ் விழாவில் 'சங்கமித்ரா' படத்தின் முதல் பார்வையை வெளியிட உள்ளார்கள் என இயக்குனர் சுந்தர் .சியின் மனைவி குஷ்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 'சங்கமித்ரா' படம் தயாராக உள்ளது.