'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மெரினா பாண்டிராஜன் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் ரெஜினா. அதற்கு முன்பே சில படங்களில் நடித்தபோது அந்த படத்தில்தான் அவர் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தார். அயைடுத்து ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் உள்பட சில படங்களில் நடித்த ரெஜினாவின் கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இந்நிலையில், தனது அழகை பராமரிப்பதில் அவர் அதிகப்படியான அக்கறை எடுத்து கொள்கிறார்.
இதுபற்றி ரெஜினா கூறும்போது, நான் எப்போது நடிகை ஆனேனோ அப்போதில் இருந்து டயட்ஸ் கடைபிடிக்கிறேன். ஒருநாள் கூட தவறாமல் உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வேன். அதோடு, ஜூஸ் அயிட்டங்களை அதிகமாக எடுத்துக்கொள்ளும் எனக்கு யோகா, தியானத்தில் அதிக ஈடுபாடு உள்ளது. அவுட்டோர் படப்பிடிப்புகளில் தங்கும் வசதி உள்பட, யோகா செய்வதற்கு காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தில் முதல் கவனம் செலுத்தி வருகிறேன். இதுபோன்ற விசயங்களை நான் தவறாமல் கடைபிடித்து வருவதினால் தான் என் அழகும் மெருகேறிக்கொண்டே வருவதாக கருதுகிறேன் என்கிறார் ரெஜினா.