ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லாலுடன் இணைந்து ஜனதா கேரேஜ் படத்தில் நடித்த ஜூனியர் என்டிஆர், அடுத்து நடித்துள்ள படம் ஜெய் லவகுசா. இந்த படத்தில் அவர் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வரும் இந்த படத்தில் ரக்ஷி கண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள மூன்று வேடங்களையும் வித்தியாசப்படுத்தி காட்ட வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் மேக்கப்மேனை வைத்து அவரது கெட்டப்பை மாற்றியுள்ளார்கள். செப்டம்பர் 1-ந்தேதி இந்த படம் திரைக்கு வருவதாக கூறப்படும் நிலையில், வருகிற மே 19ந்தேதி அன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகிறது.