‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கர்நாடகத்தை சேர்ந்த கிஷோர், பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்து தனக்கென தனியான ஒரு இமேஜை ஏற்படுத்திக் கொண்டார். கன்னடத்தில் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். கில்லிங் வீரப்பன் படத்தில் வீரப்பனாக நடித்தார்.
தற்போது கிஷோர் விருதுக்காக எடுக்கப்படும் கல்கி என்ற கலைப்படத்தில் நடித்திருக்கிறார். இது 45 நிமிடங்கள் ஓடக்கூடி ஆர்ட் பிலிம். இதில் கிஷோர் ஜோடியாக யாஸ்மின் நடித்திருக்கிறார். பிரமோத் பிலிம்ஸ் சார்பில் ஸ்ருதி தயாரித்துள்ளார்.. பரத்வாஜ் ரங்கன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார், விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் இசை அமைத்துள்ளார். திலீப் இயக்கியுள்ளார்.
"சவாலான கதாபாத்திரங்கள் என்றாலே நடிகர் கிஷோருக்கு மிகவும் பிடிக்கும். நல்ல கதை அமசமுள்ள படங்கள் எந்த ரூபத்தில் வந்தாலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் அதை உடனுக்கு உடன் ஏற்று நடிப்பதில் மூலம் தன் நடிப்பு பசிக்கு தீனி போட்டுக் கொண்டு இருப்பவர். இவர் நடிப்பில் தற்போது தயாராகி உள்ள கல்கி 45 நிமிட படம் சர்வதேச அளவில் பெரும் பெயர் ஈட்டி தரப்பு போகும் படம் .
படத்தின் தலைப்பே கதை சொல்லும். கல்கி என்றால் அழிப்பவர் என்று அர்த்தம். வெளி நாடுகளில் நடந்து கொண்டு இருக்கும் திரைப்பட விழாக்களில் கல்கி கலந்து கொண்டு நமது நாட்டுக்கு சிறப்பு செய்யும். கிஷோரின் நடிப்பு அவருக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி கொடுக்கும்" என்கிறார் தயாரிப்பாளர் சுருதி.