Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் பற்றி ரஜினிகாந்தின் பரபரப்பு பேச்சு - முழு விவரம்

15 மே, 2017 - 16:46 IST
எழுத்தின் அளவு:
Rajini-speech-about--about-politics

நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் ரசிகர்களுடன் ரஜினிகாந்த் இன்று புகைப்படம் எடுக்கும் நிகழ்வையும், அவர்களைச் சந்திப்பதையும் இன்று காலை சென்னையில் அவருக்குச் சொந்தமான ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் ஆரம்பித்து வைத்தார். அப்போது ரஜினிகாந்தை வைத்து பல படங்களை இயக்கிய இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உடனிருந்தார். மண்டபத்தில் திரளாகக் கூடியிருந்த ரசிகர்கள், மீடியாக்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் பேசிய அரசியல் பேச்சின் முழு விவரம்....


"12 வருடங்கள் ஆகிவிட்டது உங்களை சந்தித்து. அப்போது எல்லாம் ஒரு படம் 100 நாள், 150 நாள் ஓடுச்சின்னா வெற்றி விழா நடக்கும் உங்களை சந்திப்பேன். இப்ப 10, 12 வருஷமா அதெல்லாம் நடக்கலை. எந்திரன் நல்லா போச்சி, சில காரணங்களால அவங்க விழா நடத்தலை. அப்புறம் வந்த 'கோச்சடையான்' படம்லாம் சரியா போகலை. அப்புறம் வந்த 'கபாலி' நல்லா போச்சி. சில காரணங்களால, சில நிகழ்வுகளால அந்த சந்தர்ப்பத்துல அதையெல்லாம் செய்ய முடியலை. அந்தந்த சமயத்துல, அந்தந்த விஷயங்கள செஞ்சாதான் நல்லா இருக்கும். இப்ப ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு.


முதல்லயே உங்களைச் சந்திக்கணும்னு நினைச்சேன். 5 நாள்ல எல்லாத்தையும் முடிச்சிடலாம்னு நினைச்சேன். பத்து பேரா, எட்டு பேரா எடுக்கணும்னு நினைச்சேன், சிலருக்குப் பிடிக்கலை. எனக்கும் பிடிக்கலை. சரி, சரியா பிளான் பண்ணி, ரசிகர்களை வரவழைச்சி, கட்டுப்பாடா நடத்தி, நம்ம ரசிகர்கள்னா, யாரு, எப்படி, நம்மளாலயும் ஒழுங்கா எல்லாம் பண்ண முடியும், 2.0 டப்பிங் வேலை இருந்தது. அடுத்த படம் கதை விவாதம் இருந்தது. அப்புறமாதான் இப்ப பண்ணனும்னு ஏற்பாடு பண்ணேன்.


ஒரு விஷயத்தை செய்யும் முன் நிறைய யோசிப்பேன்


ஸ்ரீலங்கா போறதா இருந்தது. சில காரணங்களால போக முடியலை. உடனே சில ஊடகங்கள், ரஜினி எதுலயும் ஸ்திரமா இருக்க மாட்டாரு. மைன்ட் சேஞ்ச் பண்ணிக்கிட்டேயிருப்பாரு, தயங்கறாரு, பயப்படறாருன்னு அப்படியெல்லாம் பேசினாங்க, எழுதினாங்க. நான் ஏதாவது ஒரு விஷயம்னு சொன்னா, நிறைய யோசிப்பேன், என் அளவுக்கு சிந்தனை பண்ணி, ஏதாவது ஒரு முடிவெடுக்கணும்னா முடிவெடுப்பேன். முடிவெடுத்த பிறகுதான் சில பிராப்ளம் வரும். தண்ணில காலை வைக்கிறோம், காலை வச்ச பிறகுதான் உள்ள நிறைய முதலைகள் இருக்குன்னு தெரியுது. எடுத்து வச்ச காலை எடுக்க மாட்டான்னு சொன்னால் என்ன ஆகும், எடுக்கணும்... முரட்டு தைரியம் எதுவும் இருக்கக் கூடாது. பேசறவங்க பேசிக்கிட்டுதான் இருப்பாங்க.


தமிழ் மக்கள் ஒரு விஷயத்துலதான் ஏமாறாங்க


ரஜினி ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது மட்டும்தான், படம் ஓடறதுக்கு ஸ்டன்ட் பண்ணுவாருன்னு, ஏதாவது சொல்வாரு, படம் ஓடறதுக்கு எதாவது பண்ணுவாருன்னு சொல்வாங்க. உங்க ஆசீர்வாதத்துனால, உங்க அன்பால, நான் அப்படி பண்ண வேண்டிய அவசியமில்லை. ஏன்னா, என் ரசிகர்கள், என் தமிழ் மக்கள் இதுக்குலாம் ஏமாற மாட்டாங்க. என்னமோ தெரியாது, தமிழ் மக்கள் ஒரு விஷயத்துலதான் ஏமாறாங்க, அதை நான் இப்ப சொல்ல விரும்பலை. அரிசி வெந்தால்தான் சோறு ஆகும். படம் நல்லா இருந்தால்தான் வெற்றியடையும், நீங்க என்ன குட்டிக்கரணம் அடிச்சாலும் வெற்றி பெற முடியாது.


21 வருடத்திற்கு முன் நடந்தது அரசியல் விபத்து


ரஜினி, அரசியலுக்கு வரத்தயங்குவாரு, படம் பார்க்க ரசிகர்களை வரவைக்கத்தான் அப்படி பேசுவாருன்னு சொல்வாங்க. 21 வருஷத்துக்கு முன்னாடி, ஒரு அரசியல் விபத்துன்னு சொல்லலாம், என் மொழியில. சந்தர்ப்ப சூழ்நிலையால, அப்ப ஒரு கூட்டணிக்கு, சில காரணங்களால, நான் ஆதரவு தெரிவிக்க வேண்டி வந்தது. என்னை வாழ வைத்த தமிழ் மக்கள், ரசிகர்கள், அப்ப என் பேச்சைக் கேட்டு அதுக்கு ஆதரவு அளிச்சாங்க. அதுல இருந்து என் பேரு அரசியல்ல அடிபட்டுக்கிட்டிருக்கு


தவறாக பயன்படுத்துகிறார்கள்


அப்போதுல இருந்து சிலர் ஆதாயத்துக்காக நான் ஆதரவு தரன்னு சொல்லி உங்களைத் தப்பா பயன்படுத்திக்கிட்டிருக்காங்க. சிலர் பணம் கூட பண்ண ஆரம்பிச்சாங்க. ருசி கண்ட பூனை மாதிரி ஆகிட்டாங்க. அதுக்கப்புறம், ஆதாயத்துக்காக அவங்க இவங்ககிட்ட வரது, இவங்க அவங்ககிட்ட போறதுன்னு ஆகிடுச்சி. நான் ஒரு பெரிய அரசியல் தலைவனோ, சமூக சேவகனோ இல்லை. என் பேரைச் சொல்லி பலர் வராங்கன்றதுக்காகத்தான் சொல்றேன்.


எப்ப எம்எல்ஏ., அமைச்சர் ஆவது.?


அதுல வந்து, நிறைய ரசிகர்கள் எனக்கு லெட்டர் எழுதறாங்க. நாம இப்படியே இருந்துடறதா, நமக்கு பின்னாடிலாம் வந்தவங்க எல்லாம் வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு, நாம எப்ப கவுன்சிலர் ஆகறது, எம்எல்ஏ ஆகறது, அமைச்சர் ஆகறதுன்னு எழுதறாங்க. நாம எப்ப பணம் சம்பாதிக்கிறது, நாம எப்போ ரெண்டு, மூணு வீடு வாங்கறதுன்னு எழுதறாங்க. பேட்டியும் தராங்க. தப்பில்லை, ஆசை இருக்கிறது தப்பில்லை. ஆனால், அதை வச்சி பணம் சம்பாதிக்கணும்னு சொல்லும் போது, அதைப் பார்த்தால் வருத்தப்படறதா, கோபப்படறதா, சிரிக்கிறதா, ஒண்ணுமே புரியலை.


ஆண்டவன் கையில்


இப்பவும் சொல்றேன், என் வாழ்க்கை ஆண்டவன் கையிலதான் இருக்கு. இந்த உடம்பு சுத்தமா வச்சிக்கணும், இதயத்தை தூய்மையா வச்சிக்கணும். அந்த ஆண்டவன் கையில நான் ஒரு கருவி. அவன் இப்ப என்னை நடிகனா பயன்படுத்திக்கிட்டிருக்கான். நடிகனா நடிச்சிட்டிருக்கேன். நாளைக்கு என்னவா பயன்படுத்துவான்னு தெரியாது.


உண்மையா இருப்பேன்


மக்களை மகிழ வைக்கணும், பணம்கறது அப்புறம். அவன் என்ன பொறுப்பு கொடுத்தாலும், நியாயமா, உண்மையா, தர்மமா, இருப்பேன். அது என்ன, ஏதுன்னு தெரியாது. அது கடவுள் கையிலதான் இருக்கு. நீங்க கெட்ட காரியம் பண்ணும் போது மனசாட்சி சொல்லும் பண்ணாதன்னு, ஆனா அதைக் கேக்காம நாம பண்ணுவோம்.


அரசியலுக்கு வரல என்று சொல்லி ஏமாற்ற விரும்பவில்லை


நான் அரசியலுக்கு வரலன்னு சொல்லி ஏமாத்த விரும்பலை. அப்படி அரசியல் ஆசை இருக்கிறவங்களுக்கு நான் இப்பவே சொல்லிக்க விரும்பறேன். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டு நான் அரசியலுக்கு வந்தால், அந்த மாதிரி ஆளுங்கள கிட்ட கூட சேர்க்க மாட்டேன். நுழையக் கூட விட மாட்டேன். ஆக, இப்பவே ஒதுங்கிடுங்க. ஏன்னா, ஏமாந்துடுவீங்க. தயவு செய்து குடும்பம், குழந்தைகளைப் பார்த்துக்குங்க.


இந்த நிகழ்வுல ஏதாவது சின்ன பிரச்சனை வந்தால், பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க,” என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in