ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாகுபலி 2 படம் நான்கு மொழிகளில் வெளியாகி 10 நாட்களில் 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு மட்டும் 450 கோடி ரூபாயை வசூல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நான்கு மொழிகளிலும் சேர்த்து 1300 கோடி ரூபாயைத் தாண்டியுள்ளதாகச் சொல்கிறார்கள். எப்படியும் வசூல் 1500 கோடியைக் கடக்கும் என்பதுதான் திரையுலக வட்டாரங்களின் தகவலாக உள்ளது.
பாகுபலி 2 படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி பெரிய அளவில் வசூலிப்பதால், அதற்கு முன் வரை இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருந்த தங்கல் வசூல் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. எனவே, தங்கல் படத்தையும் 1000 கோடி கிளப்பில் இணைக்க வேண்டும் என பாலிவுட்டினரும், சில மீடியாக்களும் முயற்சி எடுத்து வருகிறார்களாம்.
கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தங்கல் படம் சீனாவில் வெளியானது. வெளியான நாளிலிருந்தே படத்திற்கு அதிகமான வரவேற்பு இருப்பதாகவும் இதுவரை 350 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகவும் தகவலை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், தியேட்டர்களில் 50 பேர் கூடப் படம் பார்க்க வருவதில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படியிருக்க எப்படி 350 கோடி வசூல் கிடைத்திருக்கும் என உண்மையான சினிமா ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
தென்னிந்தியப் படமான பாகுபலி 2 படத்தின் வசூலைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான், சீனாவில் தங்கல் படம் 300 கோடியைத் தாண்டியது என சொல்லி பாகுபலி 2 படத்திற்குப் போட்டியாக தங்கல் படமும் 1000 கோடியை வசூலித்துவிட்டது என பரப்புகிறார்கள் என்கின்றனர் தெலுங்குத் திரையுலகினர்.
பாகுபலி 2 இந்த வருடக் கடைசியில் சீனா மற்றும் பல உலக நாடுகளில் வெளியாக உள்ளது. அப்போது அந்த வசூலையும் சேர்த்தால் பாகுபலி 2 வசூல் எங்கோ போய்விடும் என்றும் சொல்கிறார்கள்.