வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை சோனம் கபூர். இவர் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை படத்தில் மிகச் சிறிய வேடம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்தில் சஞ்சய் தத்தாக நடிக்கும் ரன்பீர் கபூர் மீது காதல் கொள்ளும் இளம்பெண் வேடத்தில் சோனம் நடித்துள்ளார். சமீபத்தில் நடந்த மீடியா சந்திப்பின் போது சஞ்சய்தத் வாழ்க்கை படத்தில் சோனம் நடிக்கும் வேடம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சோனம், துரதிஷ்டவசமாக எனது வேடம் பற்றி சொல்ல முடியாத நிலையில் உள்ளேன். ஆனால் ராஜ்குமார் ஹிரானியின் மிகப் பெரிய ரசிகை நான். அவரின் ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்துள்ளேன். அதனால் தான் அவர் இந்த சிறிய வேடத்தில் நடிக்க என்னிடம் கேட்ட உடனேயே ஒத்துக் கொண்டேன். சிறிய வேடத்தில் நடிப்பதால் எனக்கு எந்த கவலையும் இல்லை. இந்த வரம்புகளை மீறி நான் நடிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அது போல் நடிப்பேன் என்றார். சஞ்சய் தத்தின் வாழ்க்கை படம் இந்த ஆண்டு கிறிஸ்துமசுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளது.