ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
1989ம் ஆண்டு வெளிவந்த படம் வெற்றி விழா. கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பு, சசிகலா, சலீம் கோஸ் நடித்திருந்தார்கள். பிரதாப் போத்தன் இயக்கியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். சிவாஜி பிலிம்ஸ் தயாரித்தது.
கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படத்தை 28 வருடங்களுக்கு பிறகு டார்வின் பிக்சர் சார்பில் தேவா மீண்டும் வெளியிடுகிறார். "வெற்றி விழா படம் கமல், பிரபு சினிமா வரலாற்றில் ஒரு மைல் கல். படத்தின் தலைப்பு போலவே வெற்றி விழா கண்ட படம். அதனை மீண்டும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல 5.1 டிடிஎச் ஆடியோவாக தரம் உயர்த்தி, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு படத்தை மாற்றி சினிமாஸ்கோப்பில் மீண்டும் வெளியிடுகிறோம். தற்போது பணிகள் மும்முரமாக நடந்த வருகிறது. அடுத்த மாதம் படம் வெளிவருகிறது" என்கிறார் தேவா.