Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரு கோடி பார்வையாளர்களை கவர்ந்து விவேகம் டீசர் புதிய சாதனை

14 மே, 2017 - 14:22 IST
எழுத்தின் அளவு:
Vivegam-teaser-gets-1-cr-viewers

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் விவேகம் படத்தின் டீசர் புதிய மைல்கல்லை எட்டி தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளது. மே 11 அன்று நள்ளிரவு 12.01-க்கு வெளியான விவேகம் படத்தின் டீசர் வெளியான 12 மணிநேரத்திலேயே, அதிகமானவர்களை கவர்ந்து முதலிடத்தில் இருந்த கபாலி படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், டீசர் வெளியாகிய 68 மணிநேரத்தில் 1 கோடி (10 மில்லியன்) பார்வையாளர்களை பெற்று புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. கபாலி டீசர் வெளியாகி 3 நாட்களில் படைத்த சாதனையை விவேகம் டீசர் 68 மணிநேரத்திலேயே படைத்திருப்பது அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அஜித் பட டீசர் 1 கோடி பார்வையாளர்களை பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. அஜித் நடித்துள்ள படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் படமும் இதுதான்.


ஹாலிவுட் தரத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர், அதிக பார்வையாளர்களை பெற்றிருப்பதற்கு சிவாவின் இயக்கமும், அஜித்தின் லுக், ஸ்டைல், வசனங்கள், அனிருத்தின் பின்னணி இசை, ருபனின் எடிட்டிங் என விவேகம் பட கூட்டணியின் பிரம்மாண்டமே காரணம் என்று கூறுகிறார்கள். விவேகம் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.


Advertisement
மலையாளம், கன்னடத்தில் தன்ஷிகாமலையாளம், கன்னடத்தில் தன்ஷிகா ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி நடிக்கவில்லை : தயாரிப்பு நிறுவனம் விளக்கம் ஹாஜி மஸ்தான் கதையில் ரஜினி ...


வாசகர் கருத்து (14)

thanthi - Chennai,இந்தியா
15 மே, 2017 - 12:02 Report Abuse
thanthi அஜித் ரசிகர்கள் பலர் வேலை இல்லாமல் இந்த டீசர் பார்த்து நேரத்தை போக்குகிறார்கள். .
Rate this:
Ganesh - Chennai,இந்தியா
15 மே, 2017 - 11:15 Report Abuse
Ganesh நான் அஜித்தின் ரசிகன் இல்லை, அஜித் அவ்வளவு பெரிய நடிப்புத்திறமை கொண்டவரும் இல்லை, ஆனால் ஒன்று மட்டும் உண்மை, இவருக்கு போன்ற வெறித்தனமான ரசிகர்களை கொண்ட நடிகர் யாரும் இல்லை. அதற்காகவே ஒரு சல்யூட். பொதுவாழ்வில் மிகவும் நேர்மையான வாழ்க்கை வாழும் ஒரு மனிதர்.
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15 மே, 2017 - 04:43 Report Abuse
Sanny இங்கே கருத்து கேட்கிறாங்க, படம் ஓடுமா? தியேட்டருக்கு கூட்டம் வருமா?வராதா? என்று, உண்மையை சொல்லப்போனால் தல படத்தை அதிகம் பார்த்து, வசூல், சாதனைகளுக்கு உதவுவது, முதலில் பார்ப்பது விஜய் ரசிகர்கள்தான், காரணம் நம்ம தலைவரின் படத்தை விட தலைவரின் படம் நல்லதா, நம்ம தலைவரை விட நல்லாக நடித்தாரா? நல்ல காட்சிகள், சண்டைகள் இருக்கா, இந்த படம் இவளவு பிரமாதமா? என்று எல்லாம் பார்க்க தான் போவார்கள். இதனால் அஜித்தின் பட வசூலும், சாதனையும் கூடுமே தவிர குறையாது. இங்கே டீசரை அதிகம் பார்த்தது விஜய் ரசிகர்கள் என்று தான் அறிய முடிகிறது, தினமலரில் அப்படி கருத்தித்து எழுதுவது அவர்கள். என்னைப்பொறுத்தவரை எனக்கு எல்லோரையும் புடிக்கும், மன அமைதிக்கு, டென்ஷன் நீங்க படம் பார்ப்பேன், அதுசரி இந்த ரசிகர்கள் போல அஜித்தும், தல யும் எதிரிங்களா? இல்லையே அவர்கள் இருவருமே நல்ல நண்பர்கள்,
Rate this:
Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்
15 மே, 2017 - 03:31 Report Abuse
Makkal Enn pakam ரொம்ப முக்கியம் ...வேலை இல்லாத பயலுங்க...அவன் கோடி கோடி யா வாங்கிட்டு போறான்...நீ அவன் பின்னாடி போய் ஒண்ணும் இல்லாம கடைசில வெறுமையா நில்லு ....
Rate this:
14 மே, 2017 - 23:06 Report Abuse
KrishnaMurthy அஜித் படம் ஒரு நாள் தான் புல்ல இருக்கும் அடுத்த நாள் ஈ முக்கும்
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karuppan
  • கருப்பன்
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
  • இயக்குனர் :பன்னீர்செல்வம்
  Tamil New Film Theeran Adhigaram Ondru
  Tamil New Film Nadodi Kanavu
  • நாடோடி கனவு
  • நடிகர் : மகேந்திரன்
  • நடிகை : சுப்ரஜா
  • இயக்குனர் :வீரசெல்வா
  Tamil New Film Mersal
  • மெர்சல்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : காஜல் அகர்வால்
  • இயக்குனர் :அட்லீ

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in