ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கிளாமர் ஹீரோயின் என்ற இமேஜில் இருந்து விடுபடத் தொடங்கியிருக்கிறார் ஸ்ருதிஹாசன். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகயிருக்கும் சங்கமித்ரா படத்தில் சரித்திர கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதற்காக வாள் சண்டை, கத்தி சண்டை என தீவிரமாக பயிற்சி எடுத்துள்ளார். கிட்டத்தட்ட ராணி ருத்ரம்மாதேவி, பாகுபலி படங்களுக்காக அனுஷ்கா பயிற்சி எடுத்ததைப்போன்று ஸ்ருதிஹாசனும் முறையான பயிற்சி எடுத்திருக்கிறார்.
அதையடுத்து, பேஹன் ஹோகி தேரி என்றொரு இந்தி படத்தில் வெயிட் போட்டு நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அதாவது அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக வெயிட் போட்டாரே அந்த மாதிரி இல்லையென்றாலும் ஓரளவு வெயிட் போட்டுள்ளாராம் ஸ்ருதி. கதைப்படி இப்படத்தில் பஞ்சாபி பெண்ணாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், சதா நொறுக்குத்தீனி தின்று கொண்டேயிருக்கும் பெண்ணாக நடிக்கிறார்.