ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அஜீத் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களையும் தொடர்ச்சியாக இயக்கியிருப்பவர் சிறுத்தை சிவா. அப்படி அவர் இயக்கிய முதல் இரண்டு படங்களையும் விட தற்போது இயக்கியுள்ள விவேகம் படம் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக பிரமாண்ட படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது.
முக்கியமாக, இதற்கு முன்பு வெளியாகி சாதனை படைத்த பல முன்னணி ஹீரோக்களின் பட டீசர்களை விடவும் அதிகமான பார்வையாளர்கள், லைக்குகளை பெற்று முன்னிலை வகிக்கிறது விவேகம் டீசர். மேலும், அமெரிக்காவிலும் விவேகம் டீசருக்கு மிகப்பெரிய ரீச் கிடைத்துள்ளதாம். அதையடுத்து, அங்குள்ள போர்ப்ஸ் என்ற பத்திரிகை ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், தென்னிந்திய சூப்பர் ஸ்டார் அஜீத் பட டீசரை அவரது ரசிகர்கள் இடைவிடாமல் பார்த்து சாதனை செய்திருக்கிறார்கள். மேலும், இந்த விவேகம் பட டீசர், ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இணையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.