ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் நித்யாமேனன், காஜல்அகர்வால், சமந்தா ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் அப்பா விஜய் ஊர்த்தலைவராகவும், மகன் விஜய்களில் ஒருவர் டாக்டர் வேடத்திலும் நடிக்கும் செய்திகள் தான் இதுவரை வெளியாகி வந்தன. ஆனால் இப்போது இன்னொரு வேடத்தில் அவர் மாயா ஜாலங்களை செய்யும் மேஜிக்மேன் வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த வேடத்திற்கு படத்தில் கூடுதல் முக்கியத்துவம் உள்ளதாம். இந்த தகவல் வெளியானதில் இருந்து அந்த வேடம் குறித்த சுவராஸ்யங்களை அறிய விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.