இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் ஸ்பைடர். 100 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள இந்த படத்தில் ராகுல் பிரீத்சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத் உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இறுதிகட்ட பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார் முருகதாஸ்.
இந்நிலையில், ஸ்பைடர் படத்தை அடுத்து தெலுங்கு இயக்குனர் கொரடாலா சிவா இயக்கும் பாரத் அன் நேனு என்ற படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இந்த படத்தின் படப்பிடிப்பு மே 16-ந்தேதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி என்ற இந்தி நடிகை நாயகியாக நடிக்கிறார்.