'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு படத்தின் ஆரம்பம் என்பது அந்தப் படத்தைப் பற்றிய பேச்சு வார்த்தைகளைத் நடத்துவதிலிருந்தே தொடங்கி விடுகிறது. அப்படிப் பார்த்தால் 'பாகுபலி 3' படத்திற்கான பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகிவிட்டது என பாலிவுட் வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பைப் பெறும், நல்ல வசூலைப் பெறும் என தயாரிப்பாளரும், இயக்குனரும் நம்பியிருந்தார்கள். ஆனால், இப்படியொரு உலக மகா வரவேற்பும், வசூலும் கிடைக்கும் என்று அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். உலக அளவில் 1200 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. டப்பிங் படமாக இருந்தாலும் ஹிந்திப் படம் மட்டுமே இந்திய அளவில் 400 கோடியை வசூலித்தது என்பதெல்லாம் பெரிய விஷயம் என திரையுலகமே நினைத்துக் கொண்டிருக்கிறது.
'பாகுபலி' படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை வாங்கி சுமார் 200 கோடி வரை லாபம் பார்த்த இயக்குனர் கரண் ஜோஹர் 'பாகுபலி 3' படத்தைத் தயாரித்தால் என்ன என கேள்வி எழுப்பினாராம். 'பாகுபலி' தயாரிப்பாளர்கள், இயக்குனர் ராஜமௌலி ஆகியோரிடமும் இது பற்றி பேசிவிட்டதாகவும் சொல்கிறார்கள். 'பாகுபலி' என்ற பெயருக்கு இத்தனை வரவேற்பும், வசூலும் இருக்கும் போது மேலும் ஒரு பாகத்தைத் தயாரித்தால் என்ன என்று ஆலோசனை நடந்திருக்கிறது. முதலில் இதற்கு மறுத்த ராஜமௌலி பின்னர் சரி என்று சொல்லியதாகவும் தகவல். ஆனால், இது முழுமையான செயல் வடிவம் பெற அடுத்த ஆண்டு ஆகும் என்கிறார்கள்.
ராஜமௌலிக்கு பாகுபலியின் மூன்றாம் பாகத்தை எடுக்க விருப்பமில்லை என்றாலும் இந்த அளவிற்கு படம் பெரிய வெற்றி பெற இதில் முதலீடு செய்த தயாரிப்பாளர்களின் விருப்பத்தையும், ஹிந்தியில் வாங்கி வெளியிட்ட கரண் ஜோஹரின் விருப்பத்தையும் தட்டக் கூடாது என்பதுதான் காரணமாம். நன்றிக்கு மறு பெயர் ராஜமௌலி என்கிறார்கள் பாலிவுட்டில்.