Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

57 வினாடியில் அஜித் மட்டுமே, மற்றவர்கள் எங்கே ?

13 மே, 2017 - 14:33 IST
எழுத்தின் அளவு:
Why-ajith-only-part-in-Vivegam-teaser.?

அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அடுத்தடுத்து பல சாதனைகளை இந்த டீசர் புரிந்தது. குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், அதிக லைக்குகள் என இதுவரை தமிழில் இதுவரை வெளிவந்த அனைத்து டீசர்களின் சாதனைகளையும் முறிடியத்து முதலிடத்தைப் பிடித்துள்ளது.


திரையுலகத்தைச் சேர்ந்த பலரும் இந்த டீசரைப் பாராட்டி வரும் நிலையில் டீசர் பற்றிய விமர்சனங்களும் எழாமல் இல்லை. “வெளிநாட்டில் எந்த ஒரு ஆக்ஷன் படத்தை எடுத்தாலும் அது ஹாலிவுட் படம் போலத்தான் தெரியும். அப்படித்தான் இந்தப் படமும் தெரிகிறது. தொடர்ந்து இந்தப் படத்திலும் அஜித் நரைத்த தலையுடன்தான் நடித்திருக்கிறார். 57 வினாடி டீசரில் அஜித்தைத் தவிர வேறு யாரையும் ஒரு வினாடி கூட காட்டவில்லையே ஏன் ?. தொடர்ந்து நள்ளிரவிலேயே டீசரை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுப்பது ஏன் ?. ஒவ்வொரு டீசரிலும் அஜித் குரலை அழுத்திக் கொண்டே பேசுவது ஏன் ?. 'விவேகம்' என்ற தலைப்பைத் தவிர வேறு எங்குமே தமிழ் இல்லை” என அடுக்கடுக்காக டீசரை 'டிரோல்' செய்து கொண்டிருக்கிறார்கள்.


படத்தில் நடித்த மற்றவர்கள்தான் மிகவும் பாவம். இந்த டீசரில் ஒரு வினாடி கூட நாம் இருக்க மாட்டோம் என்று தெரிந்தும் அவர்கள் டீசரைப் பாராட்டி 'ஷேர்' செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அதிலும் இந்தப் படத்தில் நடித்துள்ள ஹிந்தி நடிகரான விவேக் ஓபராய் அதையெல்லாம் வெளியில் காட்டிக் கொள்ளாமல், “அஜித் அண்ணா, தல ரசிகர்கள், என் தமிழ்க் குடும்பங்கள்” என பெருந்தன்மையாக நடந்து கொண்டு டிவீட் செய்கிறார். அந்தப் பெருந்தன்மைக்காகவாவது விவேக் ஓபராயை படத்தில் ஒரு வினாடியாவது காட்டுங்கள் என அஜித் சொல்லியிருக்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in