ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.அதையடுத்து அதே படத்தில் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்த அவர், தமிழில் விஜய்சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும், கவண் மற்றும் தனுஷின் ப.பாண்டி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கியூமென்ஸ் ஆப் சம்ஒன் என்றொரு ஆங்கில படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், பெல்லி சூப்புலு, துவாகரா, அர்ஜூன் ரெட்டி உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்த விஜய் தேவராகண்டா நடிக்கும் புதிய படத்தில் தற்போது ஒப்பந்தமாகியிருக்கிறார் மடோனா செபஸ்டியன். ரொமான்டிக் காதல் கதையில் தயாராகும் இந்த படத்தை பரசுராம் இயக்குகிறார். பிரேமம் தெலுங்கு படத்தில் நடித்த மடோனாவின் நடிப்புக்கு அங்கு ஏற்கனவே ஒரு ரசிகர் வட்டம் உருவாகியிருப்பதை அடுத்து, இந்த படத்தில் அவருக்கு வெயிட்டான நாயகி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.