Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித்தின் விவேகம் படத்தில் நடிக்காதது ஏன்? -அப்புக்குட்டி

13 மே, 2017 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Appukutty-replied-why-he-did-not-act-in-Vivegam

சுசீந்திரன் இயக்கிய அழகர்சாமியின் குதிரை படத்தில் கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது பெற்றவர் அப்புக்குட்டி. தொடர்ந்து ஹீரோ, கேரக்டர், காமெடியன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வரும் அவர், அஜித்தின் வீரம், வேதாளம் படங்களில் நடித்தார். அப்போது அப்புக்குட்டிக்கு போட்டோ செஷன் நடத்திய அஜித், அவரது கெட்டப்பையே மாற்றிக்காட்டினார். அதோடு அவரது நிஜ பெயர் சிவபாலன் என்பது தெரிந்ததும் சிவபாலன் அப்புக்குட்டி என்று பெயரையும் மாற்றினார். இப்படி அஜித் தன் மீது தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொண்டதால், அவரை பாசத்தோடு அஜித் அண்ணன் என்று அழைத்து வருகிறார் அப்புக்குட்டி.


இந்நிலையில், தற்போது அஜித் நடித்து வரும் விவேகம் படத்திலும் அப்புக்குட்டி நடிப்பதாகவே கூறப்பட்டது. ஆனால், இப்போது அதுகுறித்து அப்புக்குட்டியிடம் கேட்டால், விவேகம் படத்தில் முதலில் நான் நடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால் பின்னர் கதையில் செய்த சில மாற்றம் காரணமாக எனக்கு அந்த படத்தில் வாய்ப்பு இல்லை. என்றாலும் நான் வருத்தப்படவில்லை. அஜித்தின் அடுத்த படத்தில் கண்டிப்பாக எனக்கு சான்ஸ் கிடைக்கும் என்று நம்புகிறேன்.


அதோடு, விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தல அஜித்தின் தோற்றம் கண்டு அசந்து விட்டேன். சமீபத்தில் வெளியான விவேகம் டீசரை கண்டு இன்னும் மிரண்டு விட்டேன். ஹாலிவுட் படத்துக்கு இணையாக படமாக்கப்பட்டுள்ள விவேகம் டீசர் பிரமாதமாக உள்ளது. அதில் அஜித்தின் பர்பாமென்ஸ், லுக் எல்லாமே அசத்தலாக உள்ளது. அதனால் விவேகம் படத்தை பார்க்க அவரது ரசிகன் என்ற முறையில் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அப்புக்குட்டி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in