இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
அஜித்தின் விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே அதில் அவர் சிக்ஸ்பேக் கெட்டப்பில் தோன்றியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து தற்போது வெளியாகியுள்ள விவேகம் டீசர் இன்னும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் நடிகர் விஜய் வசந்த்.
அதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, மே மாதம் 1-ந்தேதி என்றாலே சிறப்பு தான். உழைப்பாளர் தினமான அன்று அஜித்தோட பிறந்தநாள். ஆனால் இந்த வருடம் இன்னொரு சிறப்பாக அஜித் நடித்துள்ள விவேகம் படத்தில் டீசர் மே 11-ந்தேதி வெளியாகியது. அந்த டீசர் வெளியாகி சமூக வலைதளங்களையெல்லாம் பரபரப்பாகி விட்டது. டீசர் வெளியானதில் இருந்தே டிரன்டிங் ஆகிக்கொண்டேயிருந்தது. அதைப்பார்த்த பிறகு விவேகம் படத்தை பார்க்கும் ஆர்வம் இன்னும் அதிகரித்து விட்டது.
மேலும் அவர் பைக்கில் வரும் ஸ்டைல், டயலாக் பேசுவது மேங்கிக் எல்லாமே பிரமாண்டமாக உள்ளது. அவர் யாரை என்ன சொல்கிறார்கள் என்பதை தெரியாத அளவுக்கு சஸ்பென்சாக உள்ளது. டீசரையே திரும்ப திரும்ப பார்க்கிறோம். படத்தை எவ்வளவு தடவை பார்க்கப்போறோம்னு தெரியல. எப்பவும் அஜித் நடித்த படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்த்து விடும் நான் இந்த விவேகம் படத்தையும் முதல் நாள் முதல் காட்சியை காண மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் விஜய் வசந்த்.