பாகுபலி மாதிரியான படங்கள் தமிழிலும் வர வேண்டும் : ஜீவா - Tamil cinema also to make movie like Bahubali says jeeva
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாகுபலி மாதிரியான படங்கள் தமிழிலும் வர வேண்டும் : ஜீவா

13 மே, 2017 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Tamil-cinema-also-to-make-movie-like-Bahubali--says-jeeva

ஜீவா நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற படம் வருகிற 19ந் தேதி வெளிவருகிறது. கடந்த சில படங்களின் தோல்விக்கு பிறகு இந்த படம் வெளிவருதால் இதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:


இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். ஒரு முறை இணைந்து பணியாற்றிய இயக்குனருடன் இன்னொரு முறை சேர்ந்ததில்லை. நான் நினைத்திருந்தால் ராஜேஷ், கே.வி.ஆனந்த் மாதிரி எனக்கு வெற்றி கொடுத்து இயக்குனர்களுடன் தொடர்ந்து நடித்திருக்க முடியும். ஆனால் நான் புதிய விஷயங்கள், புதிய இயக்குனர்களைத் தேடிச் செல்கிறேன். எனது தேடலில் சில தோற்றிருக்கலாம். அதற்காக நான் சோர்ந்து விடவில்லை. ஒரே மாதிரியாக நடிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதிலும் குறிப்பாக ஹாரர் படங்களில் நடிக்க பிடிக்கவில்லை. ஒரே மாதிரி பயந்து நடிக்க வேண்டியதிருக்கிறது.


சங்கிலி புங்கிலி கதவ தொற பேய் படமாக இருந்தாலும் கூட்டுக்குடும்பமாக மக்கள் வாழ வேண்டும் என்கிற கருத்தை சொல்கிறது. 100 சதவிகித காமெடி படம். சினிமா மக்களை மகிழ்விக்க வேண்டும். அந்த பணியை சங்கிலி புங்கிலி கதவ தொற செய்யும்.


தமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் குறைவு. ஒரு படத்திற்கு ஒரு எழுத்தாளர் பணியாற்றினால் அவருக்கு மிக குறைந்த ஊதியம் கொடுக்கப்படுகிறது. இதனால் அந்த எழுத்தாளர் அடுத்த படத்தில் இயக்குனராகிவிடுகிறார். இயக்குனர்கள் எழுத்தாளர்களுடன் நட்பாக இருக்க வேண்டும். அவர்களின் கதையை பயன்படுத்த வேண்டும். தமிழ் சினிமாவில் எழுத்தாளர்களுக்கு நல்ல சம்பளமும், நல்ல மதிப்பும் கொடுத்தால் நல்ல கதைகள் கிடைக்கும், நல்ல படங்கள் கிடைக்கும்.


பாகுபலி மாதிரியான படங்கள் தமிழிலும் வரவேண்டும். அந்த முயற்சிகளை நாம் முன்னெடுக்க வேண்டும். பொன்னியின் செல்வன், மருத நாயகம் மாதிரியான கதைகள் நம்மிடம் நிறைய உள்ளன. அதை நோக்கிச் செல்ல வேண்டும். சினிமாவை நேசிப்பவர்கள் எப்போதும் சினிமாவை விட்டு போக மாட்டார்கள். லாபமோ நஷ்டமோ சினிமாவில்தான் இருப்பார்கள். என்கிறார் ஜீவா.


Advertisement
தோழியாக இருந்து ஹீரோயினான தீக்ஷிதாதோழியாக இருந்து ஹீரோயினான தீக்ஷிதா விவேகம் டீஸர் லீக்கானதற்கு யார் காரணம்? விவேகம் டீஸர் லீக்கானதற்கு யார் ...


வாசகர் கருத்து (1)

Sathish - Coimbatore ,இந்தியா
13 மே, 2017 - 12:38 Report Abuse
Sathish முதலில் நீங்க நடிக்கிற படம் ஓடுதான்னு பாருங்க, அப்புறம் பாகுபலிக்கு போகலாம். எலி இனப்பெருக்கம் செய்வது போல் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை தான் அதிகம் ஆகிறதே தவிர ஒன்றும் உருப்படியாக இல்லை.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film thiri
    • திரி
    • நடிகர் : அஸ்வின் காக்மானு
    • நடிகை : சுவாதி ரெட்டி
    • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
    Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
    Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
    Tamil New Film Ivan Thandhiran
    • இவன் தந்திரன்
    • நடிகர் : கவுதம்
    • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
    • இயக்குனர் :கண்ணன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in