மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா. தில் சே படத்தின் மூலம் அறிமுகமாகி பிச்சா, எமி, ஹவுஸ்புல், ஹேப்பி நியூ ஈயர் உள்பட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார். புகழ்பெற்ற நடன கலைஞராகவும் இருக்கிறார்.
இவர் பாலிவுட் நடிகர் சல்மான்கானின் சகோதரரும், தயரிப்பாளருமான அர்பாஸ்கானை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவருக்கும் கடந்த பல மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு மும்பை குடும்ப நல கோர்ட்டில் இருவரும் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் அவர்கள் சேர்ந்து வாழ 6 மாதம் அவகாசம் அளித்தது. இருவரும் சேரவில்லை. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவருக்கும் சட்டப்படியான விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.