விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
தமிழக முதல்வர் இடப்பாடி பழனிசாமியை சென்னை, தலைமை செயலகத்தில் விஷால், பிரகாஷ் ராஜ், அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "பைரசி பிரச்னை, ஐ.எஸ்.டி., மசோதா தொடர்பான விஷயங்கள், தியேட்டர்களில் கட்டணத்தை ஒழுங்குப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். கூடவே கடந்த சில ஆண்டுகளாகவே திரைத்துறைக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கப்படாமல் இருக்கிறது. அதையும் வழங்கும்படி கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார்" என்றார்.
முதல்வருடனான சந்திப்பின்போது விஷால் தவிர்த்து பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், பைவ்ஸ்டார் கதிரேசன், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, அபிராமி ராமநாதன், ஆர்வி.உதயகுமார் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.