இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்சினிமாவை பொறுத்தவரை சினிமா பின்னணியில் படம் எடுத்தால் அந்தப்படம் ஓடாது என ஒரு சென்டிமென்ட் நீண்டநாளாக உண்டு.. அதனாலேயே இங்குள்ள முன்னணி நடிகர்கள் சினிமா பின்புலத்தை மையமாக வைத்து உருவாகும் படங்களில் நடிக்க விரும்புவதும் இல்லை. ஆனால் அதேசமயம் மலையாள திரையுலகில் வருடத்திற்கு ஐந்து படங்களாவது சினிமா பின்னணியில் உருவாகின்றன.. தவிர முன்னணி ஹீரோக்களும் சினிமாவை கதைக்களமாக கொண்ட படங்களில் நடிக்க தயங்குவதும் இல்லை.. அவை நல்ல வெற்றியும் பெற்றுள்ளன..
மோகன்லாலுக்கு 'உதயநாணுதாரம்', மம்முட்டிக்கு 'பெஸ்ட் ஆக்டர், பிருத்விராஜ் நடித்த 'ஹீரோ', திலீப் நடித்த ரிங் மாஸ்டர் என பல உதாரணங்கள் உண்டு.. இப்போது அந்த வரிசையில் துல்கர் சல்மானும் சினிமா பின்னணி கதைக்களத்தில் உருவாகும் படத்தில் முதன்முறையாக நடிக்க இருக்கிறார். ஆதாமிண்டே மகன் அபு, பத்தே மாறி ஆகிய தேசிய விருது படங்களை இயக்கிய சலீம் அஹமது தான் இந்தப்படத்தை இயக்கவுள்ளார். படத்தின் பெயரே 'ஆஸ்கர் அவார்டு கோஸ் டூ' (Oscar Award goes to) என வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது.