இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரெட்டைச்சுழி படத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருடன் இணைந்து நடித்தவர் பாரதிராஜா. அதன்பிறகு பாண்டியநாடு படத்தில் விஷாலின் அப்பாவாக நடித்தார். தற்போது குரங்கு பொம்மை, படைவீரன் ஆகிய படங்களிலும் கேரக்டர் ரோல்களில் நடித்திருக்கிறார். முக்கியமாக, ஓம் என்ற படத்தை தயாரித்து இயக்கி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் பாரதிராஜா. இந்தபடத்தின் படப்பிடிப்பு 75 சதவிகிதம் முடிவடைந்து விட்டது.
இந்த ஓம் படம் ஒரு முதியவரின் வாழ்க்கையில் நடக்கும் கதையில் உருவாகி வருகிறது. சிகப்பு ரோஜாக்கள் போன்று திரில்லர் கதை கொண்ட இந்த படத்தில், முதல் மரியாதை படத்தில் சிவாஜி நடித்த கேரக்டரின் பீலை வெளிப்படுத்தும் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடித்து வருகிறாராம். இப்படத்தின் வசன காட்சிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில், அடுத்து படத்தின் 6 பாடல்களை படமாக்க விரைவில் கேரளா செல்கிறார் பாரதிராஜா.