இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் தொலைக்காட்சி ஆண்டுதோறும் தனது கலைஞர்களுக்கு விருது வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 3ம் ஆண்டு விஜய் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. இதில் சிறந்த நடிகராக கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடிக்கும் அமித்தும், நடிகையாக சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும் ரக்ஷிதாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு விஜய் டெலிவிஷன் விருது வழங்கப்பட்டது. சிறந்த தொடராக சரவணன் மீனாட்சி தொடர் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த தொகுப்பாளினியாக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த காமெடி நிகழ்ச்சியாக கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தேர்வானது.
சிறந்த அம்மா நடிகையாக சிந்து ஷியாம் (ரேவதி) அப்பா நடிகர் (ராஜசேகர், மாமியார் நடிகை சாரதா (மாப்பிள்ளை), சிறந்த காமெடியன் அன்பு (மாப்பிள்ளை), சிறந்த வில்லி கவிதா (நீலி), சிறந்த குழந்தை நட்சத்திம் சாவி சர்மா (நீலி), சிறந்த இயக்குனர் பிரவீன் (சரவணன் மீனாட்சி) சிறந்த ஜோடி செந்தில் -ஸ்ரீஜா (மாப்பிள்ளை) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
விழாவில் டி.ராஜேந்தரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாப்பிள்ளை தொடரில் நடிக்கும் செந்தில், ஸ்ரீஜாவின் கலக்கல் நடனம் நடந்தது. கலக்கப்போவது யாரு குழுவினரின் காமெடி கலாட்டாக்களும், நடிகைகளின் நடனமும் நடந்தது. இந்த நிகழ்ச்சி வருகிற 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிறது.