பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷால், கார்த்தி இணைந்து நடிக்கும் படம் கருப்புராஜா வெள்ளைராஜா. இந்தப்படத்தை ஐசரி கணேசுடன் இணைந்து பிரபுதேவா தயாரித்து, இயக்குகிறார். இதில் ஹீரோயினாக வனமகன் படத்தில் அறிமுகமாகும் சாயிஷா நடிக்கிறார். தற்போது இந்தப் படத்தில் ஆர்யாவும் இணைந்து நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக விஷாலும், கார்த்தியும் இணைந்து 10 கோடி தருவதாக அறிவித்துள்ளார்கள். ஒவ்வொரு படத்திலும் கிடைக்கும் சம்பளத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி 10 கோடி தர இருக்கிறார்கள். இந்தப் படத்தின் சம்பளத்திலிருந்து அதனை தொடங்குகிறார்கள். படத்தில் கருப்புராஜாவாக விஷாலும், வெள்ளை ராஜாவாக கார்த்தியும் நடிக்கிறார்கள். மூன்றாவதாக ஒரு முக்கியமான கேரக்டர் உள்ளது. இதில் நடிக்க நடிகரை தேடிக் கொண்டிருந்தார்கள். இதை கேள்விப்பட்ட ஆர்யா "அந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன். எனக்கு தரும் சம்பளம் அனைத்தையும் என் பங்காக நடிகர் சங்க கட்டட நிதிக்கு கொடுத்து விடுங்கள்" என்ற கூறியிருக்கிறாராம். இதனால் ஆர்யாவும் நடிப்பது உறுதியாகி இருக்கிறது. ஆர்யா நடிப்பது சிறப்பு தோற்றத்தில் என்ற தகவலும் இருக்கிறது.