Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இணையத்தின் நம்பர் 1 தென்னிந்திய நடிகர் அஜித்

12 மே, 2017 - 10:40 IST
எழுத்தின் அளவு:
Ajith-becomes-No-1-in-South-india

தலைப்பில் குறிப்பிட்டிருப்பதைப் போல அஜித் ரசிகர்கள் தாராளமாக மார்தட்டி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் இணைய பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் டீசர், டிரைலர் ஆகியவற்றின் மூலம் யு டியூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் அஜித். அவர் நடித்து வெளிவந்த “வீரம், என்னை அறிந்தால், வேதாளம்” ஆகிய படங்கள் அந்தந்த கால கட்டங்களில் புதுப்புது சாதனைகளைப் படைத்தன. அது நேற்று வெளியான விவேகம் டீசர் வரை தொடர்கிறது.


தென்னிந்திய நடிகர்களில் ரஜினிகாந்திற்கு எப்போதுமே தனி மதிப்பு உண்டு. அந்த இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்பது குறித்து கடந்த சில வருடங்களாகவே ஒரு பரபரப்பு நிலவி வருகிறது. இளம் ரசிகர்கள், சிறுவர், சிறுமியர்கள், குடும்பத்தினர் என அனைவரும் ரசிக்கும் ஒரு நடிகராக தற்போது அஜித் இருக்கிறார் என பலரும் சொல்லி வருகிறார்கள். இப்போது ரஜினி நடித்து வெளிவந்த கபாலி படத்தின் டீசரையும் சில மணி நேரங்களில் அஜித்தின் விவேகம் டீசர் முறியடித்துள்ளது. அதனால், அஜித் எந்த கட்டத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார் என்பதை அஜித் ரசிகர்கள் தாராளமாகப் புரிந்து கொள்ளலாம்.


அஜித் படங்களின் டீசர், டிரைலர் எப்போது வெளிவந்தாலும் அது யு டியூபில் ஒரு புயலைக் கிளப்பிவிடுவது வழக்கம். அது விவேகம் டீசருக்கும் 24 மணி நேரத்திற்குள்ளாகவே நடந்திருக்கிறது. இந்த டீசருக்கு 24 மணி நேரத்திற்குள்ளாக 61 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன. ரஜினிகாந்த் நடித்த கபாலி டீசருக்கு 24 மணி நேரத்தில் 51 லட்சம் பார்வைகளும், பவன்கல்யாண் நடித்து வெளிவந்து தெலுங்குப் படமான கட்டமராயுடு படத்திற்கு 29 லட்சம் பார்வைகளும், விஜய் நடித்து வெளிவந்த பைரவா படத்திற்கு 28 லட்சம் பார்வைகளும், சூர்யா நடித்து வெளிவந்த சி 3 படத்திற்கு 27 லட்சம் பார்வைகளும் கிடைத்து விவேகம் டீசருக்கு அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.


இதன் மூலம் தென்னிந்திய அளவில் இணையத்தின் நம்பர் 1 நடிகர் என்ற பெருமை அஜித்திற்குக் கிடைத்துள்ளது. இந்த டீசருக்கான விமர்சனம், கருத்துக்கள் என அந்த வீடியோக்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை எங்கோ போகும்.


தற்போது வரை விவேகம் டீசர் 70 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. யு டியுப் அப்டேட் மெதுவாகவே மாறிக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் இன்னும் அதிகமான பார்வைகள் இந்த டீசருக்குக் கிடைத்திருக்கும். விரைவில் தயாரிப்பு நிறுவனம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in