Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அடுத்த ரம்யா கிருஷ்ணன் நான் தான்! அட்டக்கத்தி நந்திதா

12 மே, 2017 - 00:26 IST
எழுத்தின் அளவு:
I-am-next-ramyakrishnan-says-Nandita

அட்டக்கத்தி படத்தில் துவங்கி, எதிர்நீச்சல், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுபட்டி போன்ற நல்ல படங்களில் நடித்தவர் நந்திதா. நெஞ்சம் மறப்பதில்லை, உள்குத்து, வணங்காமுடி உட்பட நான்கு படங்கள், இவரது கைவசம் உள்ளன. உள்குத்து படம் குறித்து, அவர் பேசியதாவது:


* உள்குத்து படம் பற்றி சொல்லுங்க?


அட்டக்கத்தி படத்தில் பார்த்த பூர்ணிமாவை, இந்த படத்தில் பார்க்கலாம். நாகர்கோவிலில் ஒரு துணி கடையில் வேலை பார்க்கும் சாதாரண பெண்ணாக நடித்திருக்கிறேன். ஒரு கடையில், சூட்டிங் எடுத்தனர். அந்த கடைக்கு, துணி வாங்க வந்தவர்கள், நான், அங்க வேலை செய்யும் பெண் என நினைத்து, என்னிடம் வந்து விலை விசாரித்தது தான் காமெடி.


* படத்தில் வேற ஏதும் உள்குத்து இருக்கா?


எனக்கும், ஹீரோ தினேசுக்கும், எந்த உள்குத்தும் படத்தில் இல்லை. எனக்கும், என் அண்ணாவாக நடித்துள்ள பாலசரவணனுக்கும் எந்த உள்குத்தும் இல்லை. காமெடி ரோலில் நடிச்சிட்டு இருந்தாலும், இந்த படத்தில் பெரிய ரவுடியாக பாலசரவணனும், அவருக்கு பயந்து வாழும் தங்கையாக நானும், அதகளம் செய்திருக்கோம். இந்த படத்தை அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக்.


* தினேஷிடம் நீங்கள் கண்ட மாற்றம்.?


அட்டகத்தி படம் பண்ணும்போது எனக்கு தமிழ் சரியாக பேச தெரியாது. ஆனால் இப்போது நன்றாக பேசுகிறேன். அவரும் நன்றாக பேசுகிறார். மேக்கப் இல்லாமல் பாவடை தாவணி, சல்வார் போட்டுட்டு பூர்ணிமா மாதிரி என்னை கொண்டு வருவது தான் எனக்கு சவாலாக இருந்தது.


* கிராமத்து ரோல், சிட்டி ரோல் எது ஈஸி.?


கிராமத்து ரோல் பண்ணும் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டியதில்லை. எப்பவும் போல் சராசரியாக இருந்தால் போதும், மேக்-அப், காஸ்ட்யூம் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டியது கிடையாது. ஆனால் சிட்டி ரோலில் நடிக்கும் போது மாடர்ன்னா இருக்கணும், மேக்கப், காஸ்ட்யூமிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கணும்.


* பேய் படங்களில் நடிக்க, உங்களுக்கு வாய்ப்பு வந்ததா?


எனக்கு பேய் படங்களில் நடிக்க பிடிக்காது. பேய் மேக் அப் போட்டு நடிப்பதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. பேய் படங்களில் நடிக்க அதிக வாய்ப்பு வந்தது. அவற்றை தவிர்த்து விட்டேன். தெலுங்கில், ஒரு படத்தில் நடித்தேன். அந்த படம், ஹிட்டானது. தொடர்ந்து, அது போன்ற படங்களில் நடிக்க விரும்பவில்லை.


* இடைவேளி ஏற்பட்டது போல் தெரிகிறதே...?


நிறைய படங்களில் நடிக்கணும், என்னைப்பற்றி எப்போதும் செய்தி வரணும் என்று நினைப்பது கிடையாது. தேவையில்லாமல் ஒரு விழாவிற்கு போவதும், ஒரு போட்டோ போட்டு அதை விளம்பரப்படுத்தவும் விரும்பவில்லை. செல்வராகவன் படம் முடியவே 6 மாதம் ஆகிவிட்டது. அதன்பிறகு தெலுங்கு படம். இப்படி மாறி மாறி நடித்து வருகிறேன். தொடர்ந்து என் படங்கள் வெளியாகும்.


* கெஸ்ட் ரோலில் அதிகம் நடிக்கிறீர்களே?


இப்போது ஹீரோயினாக நடிக்கிறேன். இது போன்ற சூழ்நிலையில்,கெஸ்ட் ரோலில் நடித்தால், என் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். புலி படத்தில் நடிக்க அழைக்கும் போது, எனக்கு அதிக காட்சிகள் இருப்பதாக கூறினர். ஆனால், படத்தில் அந்த காட்சி கள் இடம்பெறவில்லை. அதற்கு பின் தான், எனக்கு புத்தி வந்தது. பெரிய மாளிகையில் வேலைக்காரியாக இருப்பதை விட, ஒரு குடிசையில் ராணியாக இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்தேன்.


* ஏதாச்சும் பரபரப்பா சொல்லுங்களேன்?


இப்போது, பாகுபலி தான், பரபரப்பாக பேசப்படுகிறது. நானும் படம் பார்த்தேன்; சூப்பராக இருந்தது. இன்னும் சில ஆண்டுகளுக்குள், நானும், ரம்யா கிருஷ்ணன் மேடம் மாதிரி, ஒரு ரோலில் நடிக்க வேண்டும். அப்படிப்பட்ட ரோலில் நடித்தால் தான், திரைப்படத் துறையை விட்டு போவேன். நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறேன். படம் பாருங்க; உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.


* உங்க மார்க்கெட் நிலவரம் எப்படி இருக்கு..?


ஹீரோயின்களை பொறுத்தவரை அவ்வப்போது மாற்றம் வந்து போகும். நல்ல கதை என்று வந்தால் பட்ஜெட் பற்றி யோசிப்பது கிடையாது. சம்பளம் விஷயத்தில் நந்திதா அப்படி இப்படி என்று புகார் வந்தது கிடையாது. ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுத்தும் குறைவான சம்பளத்தில் தான் நடித்தேன். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் சம்பளத்தை சற்று உயர்த்தி கொடுத்தார்கள். இப்போது எனக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது.


* டூயட், ஹீரோவுடன் ரொமான்ஸ் இதெல்லாம் தாண்டி, அடுத்தகட்டத்துக்கு போவது எப்போது?


பொதுவாக, படங்களில் ஹீரோயின் ஒரு பொம்மை மாதிரி அழகா, பூ மாதிரி வந்திட்டு போகணும். அப்போது தான், ரசிகர்கள் விரும்புவாங்க என்ற எழுதப்படாத விதிமுறை திரையுலகில் உள்ளது. இது போன்ற பல வாய்ப்புகளை, இப்போது தவிர்த்து வருகிறேன். முதலில், படத்தின் கதை எனக்கு பிடிக்க வேண்டும்; அவ்வளவு தான். பட்ஜெட் பற்றி கவலையில்லை.


* குடும்ப பாங்கான வேடத்திலேயே நடிப்பது ஏன்; கவர்ச்சியாக நடிக்கும் எண்ணம் உண்டா?


நீங்கள் கேட்பதும் நியாயம் தான்; ஆனால், பாருங்க, கொஞ்சம் மாடர்ன் போட்டோவை, சமூக வலைதளங்களில் பதிவிட்டால், லைக்ஸ் கொஞ்மாக வருது; அவ்வளவாக ரசிகர்கள் விரும்புவது இல்லை. ஏன் இந்த மாற்றம் என, கேட்கின்றனர். இனிமேல் வரும் படங்களில் வித்தியாசமான நந்திதாவை பார்க்கலாம்.


* ரசிகர்கள் பற்றி.?


நான் எங்கு வெளியில் சென்றாலும் குமுதா ஹேப்பி என்று தான் கூப்பிடுகிறார்கள். நான் பெங்களூர் பெண், அங்கேயும் இப்படி தான் அழைக்கிறார்கள். என் பெயரையே மறக்க வச்சுடாங்க. 4 ஆண்டுகளில் 15 படங்களில் நடித்துள்ளேன். ரசிகர்கள் எனக்கு ஆதரவு தருகிறார்கள், அவர்கள் நன்றி சொல்கிறேன்.


* யாராவது உங்களிடம், காதலை தெரிவித்தது உண்டா?


நம்பவே மாட்டீங்க; திரைத்துறையில் யாருமே எனக்கு, லவ் சொன்னது இல்லை. ஆனால், என்னுடன் படித்தவர்கள், எனக்கு தெரிந்தவர்கள், தங்கள் காதலை தெரிவித்தது உண்டு. படப்பிடிப்பு முடிந்ததுமே வீட்டுக்கு ஓட்டம் பிடித்து விடுவேன். பார்ட்டிகளுக்கு செல்வது இல்லை. அதனால் கூட, திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், என்னிடமிருந்து விலகியிருக்கலாம் என, நினைக்கிறேன்.


Advertisement
ஜோதிகா குமுறியது ஏன்?ஜோதிகா குமுறியது ஏன்? உண்மை சம்பவத்தை இயக்குகிறார் சுதா உண்மை சம்பவத்தை இயக்குகிறார் சுதா


வாசகர் கருத்து (1)

12 மே, 2017 - 12:53 Report Abuse
suragopalan நீ அடுத்த ரம்யா கிருஷ்ணனா??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film GajiniKanth
  • கஜினிகாந்த்
  • நடிகர் : ஆர்யா
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
  Tamil New Film Junga
  • ஜூங்கா
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : சாயிஷா சைகல்
  • இயக்குனர் :கோகுல்
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in