சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு | ரஜினி 171 தலைப்பு 'கூலி' - 'ரெட்ரோ' லுக்கில் அசத்தும் ரஜினிகாந்த் | 3வது திருமணநாளை கொண்டாடிய விஷ்ணு விஷால் | கீர்த்தி சுரேஷிற்கு திருமணமா? | வருத்தத்தில் ஜாக்குலின் |
'பாகுபலி 2' படத்தின் மூலம் பல வழிகளில் வருமானம் வந்து கொண்டிருக்கிறது. 1300 கோடி ரூபாயை மொத்த வசூல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், 'மொபைல் கேம்' ஆக வெளிவந்த 'பாகுபலி தி கேம்' பத்து லட்சம் டவுன்லோடைத் தாண்டியுள்ளது.
'பாகுபலி' நாவல், பாகுபலி காமிக்ஸ், பாகுபலி கேம் என 'பாகுபலி' கதாபாத்திரம் சிறியவர்களிடமும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அளவில் அதிகமாக டவுன்லோட் ஆன கேம் மற்றும் டாப் 10 வரிசையில் இடம் பிடித்துள்ள கேம் என்ற பெருமையை 'பாகுபலி தி கேம்' பிடித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த கேமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோடை கால விடுமுறை தினம் என்பதால் இந்த கேமிற்கு அதிகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. யு டியுப்பில் ஆரம்பமான 'பாகுபலி 2' சாதனை, தியேட்டர்களில் தொடர்ந்து தற்போது கேம் வரை சென்றிருக்கிறது.