ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட்டின் பிரபலமான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. சமீபகாலமாக சினிமாவில் அவ்வளவாக ஆர்வம் காட்டாதவர், அவ்வப்போது ஒன்றிரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்தப்படியாக ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சர்கார்-3 படத்தை முடித்துவிட்டு நாளை ரிலீஸ் செய்ய இருக்கும் ராம் கோபால் வர்மா, அடுத்தப்படியாக அபிஷேக் பச்சனை வைத்து "அரெஸ்ட்" என்ற படத்தை இயக்க உள்ளார். இந்நிலையில் இப்போது அரெஸ்ட் படத்திற்கு முன்பாக மிதுனை கொண்டு ஒரு ஹாரர் படத்தை இயக்க இருக்கிறாராம். மே மாத இறுதியில் படம் ஆரம்பமாகும் என தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.