‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
அமீர்கான் நடித்த பிகே., படம் இந்தியாவில் மாஸ் ஹிட்டானதை தொடர்ந்து அந்தப்படம் சீனாவில் திரையிடப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது. இதையடுத்து கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான தங்கல் படம் பிகே.,யை விட மாஸ் ஹிட்டாக இப்போது இந்தப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்துள்ளனர். எதிர்பார்த்தது போலவே சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான மூன்று நாளில் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் அமீர்கான். அதோடு சீன ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அமீர்கான் கூறியிருப்பதவாது... "என்னுடைய தங்கல் படத்திற்கு சீனாவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது என்னை நெகிழ செய்துள்ளது. சீன இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் சென்று தங்கல் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள வரவேற்பை மொழி பெயர்ப்பு செய்து தெரிந்து கொண்டேன். எங்கள் படக்குழு சார்பாக சீன ரசிகர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதேப்போன்று சீனாவில் இப்படத்தை ரிலீஸ் செய்த விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.