தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
அஜித் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த 'விவேகம்' டீசர் இன்று யு டியூபில் வெளியானதிலிருந்து அடுத்தடுத்து சாதனைகளைப் புரிந்து வருகிறது. குறைந்த நேரத்தில் அதிக பார்வைகள், அதிக லைக்குகள் என தொடர்ச்சியாக போய்க் கொண்டேயிருக்கிறது.
தமிழ்ப் படங்களைப் பொறுத்தவரையில் 'வேதாளம்' திரைப்படம்தான் டீசரின் லைக்குகள், பார்வையில் ஹிந்திப் படங்களுடன் போட்டி போடும் அளவிற்கு பெரிய சாதனையை நிகழ்த்தியது. அதன் பிறகே, 'தெறி, கபாலி' படங்கள் சாதனை புரிந்தன. இப்போது 'தெறி, கபாலி' படங்களின் டீசர் சாதனையை முறியடித்து 'விவேகம்' டீசர் புதிய சாதனையைப் படைத்துக் கொண்டிருக்கிறது.
யு டியூபில் இதற்கு முந்தைய அதிக பட்ச லைக் சாதனையாக 'கபாலி' டீசர் சாதனை இருந்தது. 24 மணி நேரத்திற்குள் அதிக சாதனைகளைப் புரிந்த டீசராக 'கபாலி' டீசர் 2,32,000 லைக்குகளைப் பெற்றது. அந்த சாதனையை 'விவேகம்' டிசர் 12 மணி நேரத்திற்குள்ளாக முறியடித்திருக்கிறது.
அடுத்ததாக 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சாதனையாக 24 மணி நேரத்தில் 5,42,000 லைக்குள் இருக்கிறது. அந்த சாதனையை 'விவேகம்' டீசர் முறியடிக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி. அப்படி முறியடித்தால் 'விவேகம்' டீசர் புதிய சாதனை ஒன்றை இந்திய அளவில் படைக்கும்.
தற்போது வரை 'விவேகம்' டீசரின் பார்வை 45 லட்சத்தைக் கடந்திருக்கிறது. ஆனால், யு டியுபில் இன்னும் முழுவதுமாக 'அப்டேட்' இல்லாமல் இருக்கிறது. அதே சமயம், 50 லட்சத்தை 12 மணி நேரத்திற்குள் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளார்கள். அதன் மூலம் 'கபாலி' சாதனையான 50 லட்சம் பார்வை சாதனையையும் 'விவேகம்' முறிடியத்துள்ளது. இன்னும் சில மணி நேரம் கடந்த பிறகு 'விவேகம்' டீசர் மேலும் என்ன சாதனை படைத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.