பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
முதலீட்டுக்கும் வருமானத்திற்கும் இடைவெளி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு லாபம் கிடைத்தால் அந்த வியாபாரத்தை என்னவென்று சொல்வீர்கள். இந்தியத் திரையுலகில் இதற்கு முன் இப்படி நடந்திருக்குமா என்பது ஆச்சரியம்தான்.
பாகுபலி 2 படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமையை சுமார் 120 கோடி கொடுத்து பிரபல இயக்குனரான கரண் ஜோஹர் வாங்கினார். ஆனால், கடந்த இரண்டு வாரங்களில் இந்தப் படம் ஹிந்தியில் மட்டும் சுமார் 400 கோடி வசூலை அள்ளியிருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
120 கோடிக்கும் மேலாக 80 கோடி வரை படத்திற்கான விளம்பரம் மற்ற செலவுகளைச் செய்திருந்தாலும் பாகுபலி 2 படத்தை வாங்கி வெளியிட்டதன் மூலம் மட்டுமே கரண் ஜோஹர் சுமார் 200 கோடி வரை லாபத்தைப் பார்ப்பார் என்ற வியப்பான தகவலைத் தெரிவிக்கிறார்கள்.
தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் அந்த மொழியில் கூட இவ்வளவு லாபத்தைக் கொடுத்திருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி இவ்வளவு பெரிய லாபத்தைக் கொடுத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். ஒரு டப்பிங் படம் இதுவரை 200 கோடி ரூபாய் வசூலை அள்ளிக் கொடுத்ததாக வரலாறே இல்லை.
இன்னும் எத்தனை வியத்தகு சாதனைகளை பாகுபலி 2 படம் படைக்கப் போகிறது என பாலிவுட்டில் பொறாமைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.