ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இதுவரை ஜாக்கி சான் நடித்த படங்களில் அதிக பாகங்கள் எடுக்கப்பட்ட படம் 'போலீஸ் ஸ்டோரி'.. அதை தொடர்ந்து அடுத்த இடத்தை பிடித்துள்ள படம் 'ரஷ் ஹவர்'.. இந்தபடத்தின் மூன்றாவது பாகம் 2௦௦7ல் வெளியானது. அடுத்ததாக 'ரஷ் ஹவர்' படத்தின் நான்காவது பாகம் குறித்து பேச்சு எழுந்தபோது தனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றும் என கூறியிருந்தார் ஜாக்கிசான். மோசமான ஸ்கிரிப்ட்டால் நான்காம் பாகம் என்ற பெயரில் அந்தப்படத்தை கெடுத்துவிடக்கூடாது என ஜாக்கி நினைத்தது தான் காரணம்.
மேலும் “எனக்கு ரஷ் ஹவர் நான்காம் பாகம் இப்போது தேவையில்லை.. உங்களுக்கு தேவையென்றால் தயவுசெய்து நல்ல கதை இருந்தால் மட்டும் என்னிடம் வாருங்கள்” என 2௦14ல் கூறியிருந்தார். இப்போது இந்தப்படத்தின் நான்காம் பாகத்துக்கான வேலைகள் துவங்கப்பட்டு விட்டன என்று சொல்லப்படுகிறது. ஆச்சர்யமாக இந்த நான்காம் பாகத்தில் ஜாக்கிசானுடன் பாலிவுட் சூப்பர் ஹீரோவான ஷாருக்கானும் இணைந்து நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.
கடந்த மாதம் 6௦வது சான்பிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் கலந்துகொண்டபோது அங்கே ரஷ் ஹவர் படத்தின் இயக்குனர் பிரெட் ராட்னர் ஷாருக்கானை சந்தித்தார். அப்போது நான்காம் பாகத்தில் நடிக்கும்படி வேண்டுகோள் விடுத்தாராம்.. ஷாருக்கானும் இந்தப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவிலும் நடத்தவேண்டும் என்கிற நிபந்தனையுடன் ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.