தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள படம் 'பிருந்தாவனம். 'உப்புக்கருவாடு' படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருள் நிதிக்கு ஜோடியாக தன்யா நடித்துள்ளார். 'பிருந்தாவனம்' படத்தை அண்மையில் சென்சாருக்கு அனுப்பி வைத்தனர். சென்சாரில் 'யு' சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளது.
யு கிடைத்ததால் வரிவிலக்கு கிடைக்கும் என்ற ஆசையில் தியேட்டர்காரர்கள் தன்னுடைய படத்தை திரையிட ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்தார் தயாரிப்பாளர். அந்த நம்பிக்கையில் 'பிருந்தாவனம்' படத்தை இம்மாதம் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர். ஆனால் நடந்ததோ வேறு.
பாகுபலி- 2 படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் பிருந்தாவனம் படத்தை திரையிட யாரும் ஆர்வம் காட்டவில்லை. இதுதவிர, ஸ்டிரைக் வேறு நடைபெற இருப்பதால் பிருந்தாவனம் வெளியாவதில் சிக்கல ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர் அப்செட்டில் இருக்கிறாரம்.