பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த 'தேவி' படத்தை இயக்கிய ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வனமகன்'. டார்ஜான் பட பாணியில் காட்டையும், மனித சஞ்சாரம் இல்லாமல் மிருகங்களுடன் வாழும் ஒரு இளைஞனைப் பற்றிய படம் இது.
இந்தப்படத்தில் காட்டில் வசிக்கும் இளைஞனாக ஜெயம் ரவி நடித்திருக்கிறார். வனமகன் படம் சமீபத்தில் தணிக்கை அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கைக்குழுவினர், 'யு' சான்றிதழ் வழங்கினர்.
இந்நிலையில் 'வனமகன்' படத்தின் ரிலீஸ் தேதியை ஜூன் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார் இயக்குனர் ஏ.எல்.விஜய். வரும் 30ஆம் தேதி முதல் தமிழ்த் திரையுலக ஸ்டிரைக் தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், தன் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி வைத்திருப்பதாக அறிவித்துள்ளார் ஏ.எல்.விஜய்.
உண்மையான காரணம் அதுவல்ல என்கின்றனர் வனமகன் படக்குழுவை சேர்ந்தவர்கள்.
பாகுபலி-2 இன்னும் 3 வாரங்கள் தியேட்டர்களைவிட்டு போகாது என்ற சூழல் நிலவுவதால் வனமகன் படத்தை தற்போது ரிலீஸ் செய்யும் வாய்ப்பு இல்லை.
அப்படியே திட்டமிட்ட தேதியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்றால் போதிய தியேட்டர்கள் கூட கிடைக்காது என்பதால் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைத்தாராம்.
வனமகன் தள்ளி வைக்கப்பட்ட ஜூன் 23ஆம் தேதியில்தான், சிம்புவின் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வனமகனுக்கு இன்னொரு தலைவலி?