டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஹாலிவுட் தரத்தில் வெளியாகியிருக்கும் பாகுபலி உலக அளவில் வசூலை குவித்து வருகிறது. ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு அதன் வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில் அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் டீசர் நள்ளிரவு வெளியிடப்பட்டது. பாகுபலி போன்று விவேகமும் ஹாலிவுட் தரத்திலான படம் என்கிற ரகசியத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது டீசர். அதுபற்றி ஒரு பார்வை...
ஹாலிவுட்டில் வெளிவரும் ஜேம்ஸ்பாண்ட் படங்களின் பாணியில் விவேகம் டீசர் அமைந்துள்ளது. அடர்ந்த காடுகளிலும், பனி மலையிலுல் அஜித் எதிரிகளை துரத்திச் செல்கிறார். வெளிநாட்டு வீதிகளில் தீவிரவாதிகளின் வெறிச்செயல் நடக்கிறது. அண்டர்கிரவுண்டில் எதிரிகளுக்காக காத்திருக்கிறார். பிரமாண்ட அணைக்கட்டின் மீது விமானங்கள் பறந்து கொண்டிருக்க கீழே ராணுவ வீரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நொடியும் மிரட்டலாக இருக்கிற அளவிற்கு இந்த 57 வினாடி டீசரை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சிவா.
"இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையிலும், நீ தோத்துட்டே.... நீ தோத்துட்டே...ன்னு உன் முகத்தை பார்த்து நீ ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது. நெவர்.... எவர்... கிவ் அப்..." என்கிற பின்னணி குரலில் அனல் பறக்கிறது டீசரில். ராணுவ உடையில், தலையில் தொப்பியுடன் காட்சி தருகிறார் அஜித், நவீன துப்பாக்கியால் சுடுகிறார். நவீன குண்டுகளை வீசுகிறார். பனிமலை மரத்தில் உடற்பயிற்சி செய்கிறார். மரத்தை உடைக்கிறார். மிரட்டலாக இருக்கிறது. பாகுபலி போன்று இதுவும் பட்டைய கிளப்பும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது.