ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை கங்கனா ரனாவத் தற்போது மணிகர்னிகா: க்யூன் ஆப் ஜான்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் இதற்கு முன் கேதான் மேத்தாவின் ஜான்சி கி ராணி படத்தில் நடிக்க தான் ஒப்பந்தமாகி இருந்தார். திடீரென அப்படத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்த கங்கனா, அதற்கு பதில் மணிகர்னிகா : க்யூன் ஆப் ஜான்சி படத்தில் நடிக்க துவங்கி விட்டார். இரண்டு படங்களும் கிட்டதட்ட ஒரே கதையை அடிப்படையாகக் கொண்டது தான். கேதான் மேத்தாவின் படத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கங்கனா வெளியிட்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், அந்த படத்தின் கதை ஆங்கிலத்தில் எடுப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இந்த படம் இந்திய ரசிகர்களுக்கானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அதனால் தான் அப்படத்தில் இருந்து வெளியேறி விட்டேன். ராணி லட்சுமிபாய் இந்தியர்களின் ஹீரோ. அவரை பற்றிய இயக்கப்படும் எந்த படமாக இருந்தாலும் சரி, அது இந்திய மொழிகளில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார். மணிகர்னிகா : க்யூன் ஆப் ஜான்சி படம் 2018 ம் ஆண்டு ஏப்ரல் 2மோ் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.