நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல |
பாகுபலி 2 திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகி வசூலில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது. இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலக அளவிலும் படத்திற்கு மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. படத்தைப் பலரும் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்த்து வருகிறார்கள். படம் வெளியான முதல் நாளன்றே பைரசி வெளியானது. இருந்தாலும், இந்தப் படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதுதான் தனி அனுபவம் என உணர்ந்த ரசிகர்கள் தியேட்டர்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தார்கள்.
இரண்டாவது வாரத்தைத் தொடப் போகும் பாகுபலி 2 படம் கடந்த ஞாயிறு அன்று உலக அளவில் 1000 கோடி வசூலைத் தாண்டியது. இந்த வார இறுதிக்குள் இந்தியாவில் மட்டும் 1000 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெறும் என்கிறார்கள்.
இன்னும் ஓரிரு வாரங்கள் இப்படம் தியேட்டர்களில் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓடி முடிக்கும் நிலையில் இப்படத்தின் மொத்த வசூல் 1500 கோடியைத் தாண்டுவது உறுதி. 2000ம் கோடியைத் தொடுமா என்பதுதான் பலரின் கேள்வியாக உள்ளது.
பாகுபலி 2 படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கடந்த வெள்ளியன்று அதிகப் படங்கள் வெளியாகவில்லை. இந்த வாரத்தில் “எய்தவன், சரவணன் இருக்க பயமேன், லென்ஸ், திறப்பு விழா, மர்மக்காடு, மங்களாபுரம், சாயா” ஆகிய படங்கள் வர உள்ளன. பாகுபலி 2 படத்தைக் குடும்பமாகப் பார்த்த மக்கள் மீண்டும் செலவு செய்து இந்தப் படங்களைப் பார்க்க வருவார்களா என்ற எதிர்பார்ப்புடன் இந்த வாரப் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.