இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடன மாஸ்டர் காயத்ரி ரகுராம். பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ள அவர் பாலாவின் தாரைத்தப்பட்டையிலும் நடித்தார். அதையடுத்து தற்போது நடன பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி யாதுமாகி நின்றாய் என்றொரு படத்தை அவர் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், மற்ற நடிகர் நடிகைகளைப்போலவே தற்போது காயத்ரி ரகுராமும் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடத் தொடங்கியிருக்கிறார். அந்தவகையில், சமீபத்தில் தனது நடனம், இயக்கும் படம் குறித்த விசயங்களை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார் காயத்ரி ரகுராம். அப்போது சில அஜீத் ரசிகர்கள் அஜீத் குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பினர். அப்போது ஒரு ரசிகரின் கேள்விக்கு, அஜீத் ரொம்ப நல்ல மனிதர். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து அனைவருமே கற்றுக்கொள்ளலாம் என்று பதிலளித்து அஜீத் ரசிகர்களிடம் சபாஷ் பெற்றார் காயத்ரி ரகுராம்.