ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
மாநகரம் படத்தில் நம் மனம் கவர்ந்த ஜோடியான 'சந்தீப்-ரெஜினா இருவரும் தற்போது தெலுங்கில் 'நட்சத்திரம்' என்கிற படத்தில் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ண வம்சி இயக்கியுள்ளார். ஆம், நடிகை ரம்யா கிருஷ்ணாவின் கணவரே தான். இவர் ரெஜினா குறித்து சமீபத்தில் கூறுகையில், “இந்தப்படத்தில் ரெஜினாவுடன் இணைந்து பணியாற்றிய பொழுது, என் மனைவியின் (ரம்யா கிருஷ்ணனின்) யங்கர் வெர்ஷன் தான் ரெஜினா என்பதை கண்டுகொண்டேன்' என புகழ்ந்துள்ளார்.
இந்தப்படத்தில் ரெஜினா ஒப்பந்தமானதுமே, ரெஜினாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த சிலர், கிருஷ்ண வம்சி தனது பட நாயகிகளை அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க வைத்து விடுவாரமே உஷாராக இருந்துக்கோ என பயமுறுத்தினார்களாம்.. ஆனால் இப்போது, “என்ன அப்படிப்பட்ட காட்சியில் நடித்தியா என கேட்டால், அப்படியா ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படி ஏதும் தெரியவில்லை.. ஒருவேளை படம் வந்தபின் தான் அப்படிப்பட்ட காட்சிகள் வந்திருக்கிறதா என பார்க்க வேண்டும்” கழுவுற மீனில் நழுவுற மீனாக பதிலளித்துள்ளாராம் ரெஜினா.