Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமன்னாவை டென்ஷனாக்கிய கேள்விகள்

09 மே,2017 - 15:18 IST
எழுத்தின் அளவு:

பாகுபலி- 2 படத்தை உலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்க, ஒரே ஒருவர் மட்டும் பாகுபலி பற்றி பேச்சை எடுத்தாலே செம கடுப்பாகிறாராம். அவர் வேறு யாருமல்ல.... பாகுபலி- 2 படத்தில் நடித்துள்ள தமன்னாதான்.


பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவர் நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியதால் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது தமன்னா செம கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. பாகுபலி முதல் பாகத்தில் அவந்திகா என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் தமன்னா.


அதனால் தமன்னாவின் கதாப்பாத்திரம் இரண்டாம் பாகத்திலும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது. பாகுபலி இரண்டாம் பாகத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமல்ல தமன்னாவுக்கு அதிர்ச்சி. மிக சில ஷாட்களில் தான் தமன்னாவின் முகம் தெரிந்தது. வசனம் கூட இல்லை.


தமன்னா நடித்த பெரும்பாலான காட்சிகளை நீக்கியது இயக்குநர் ராஜமௌலி தான் என்பதை படத்தில் பணிபுரிந்தவர்கள் அவரிடமே சொல்லியுள்ளனர். இதற்கிடையில் பாகுபலி-2 வெளியான பிறகு தமன்னாவை பார்ப்பவர்கள் அனைவரும் ஏன் இரண்டாம் பாகத்தில் உங்களை இருட்டடிப்பு செய்துவிட்டனர் என்று கேட்டு கேட்டு அவரது டென்ஷனை அதிமாக்கிவிட்டனர்.


Advertisement
உதயநிதிக்கு ஏற்பட்ட டென்ஷன்உதயநிதிக்கு ஏற்பட்ட டென்ஷன் 25 நாளைக்கு கடந்த 'ப பாண்டி, கடம்பன், சிவலிங்கா' 25 நாளைக்கு கடந்த 'ப பாண்டி, கடம்பன், ...


வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
09 மே,2017 - 18:38 Report Abuse
KayD கதைக்கு என்ன தேவையோ அதை தான் ராஜா மௌலி அழகா கொடுத்து இருக்கார் .. சும்மா நீங்களே பலூன் ஊதாதீங்க பாஸ் ...
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
09 மே,2017 - 17:54 Report Abuse
VSK மீடியாக்கள்தான் இதை ஊதிப் பெருசாக்குறீங்க முதல் பகுதியில் அனுஷ்காவுக்கு இதே நிலை இருந்தது . இதில் தமன்னாவுக்கு . கதைக்கு எது தேவையோ அதுதான் சரி என நினைக்கும் ராஜமௌலி பாராட்டுக்குரியவர் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum
    Tamil New Film Geminiganesanum Surulirajanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in