வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடித்திருக்கும் 'சரவணன் இருக்க பயமேன்' வருகிற 12- ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். இந்தப்படத்தை 'லைகா புரொடக்ஷன்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.
இது இந்த நிறுவனத்தின் 9 ஆவது தயாரிப்பாம். உதயநிதி ஸ்டாலினுடன் மஞ்சிமா மோகன் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தின் பாடல் காட்சியை படம் பிடிப்பதற்காக சமீபத்தில் ஓமன் நாட்டிற்கு சென்றுவந்துள்ளனர். 'இப்படை வெல்லும்' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று தான் டப்பிங் தொடங்கியது.
இது ஒரு பக்கம் இருக்க, பாகுபலி- 2 படத்தினால் 'சரவணன் இருக்க பயமேன்' படத்திற்கு போதுமான தியேட்டர் கிடைக்கவில்லை என்பதால் உதயநிதி ஸ்டாலின் அப்ஸெட்டாகி இருக்கிறாராம். அதனால் இயல்பாக டப்பிங் பேச முடியாமல் திணறி இருக்கிறார். 'சரவணன் இருக்க பயமேன்' டென்ஷன் காரணமாக அவரால் டப்பிங்கில் கவனம் செலுத்த முடியாமல் போனதால் டப்பிங்கை தள்ளி வைக்கலாமா என லைகா தரப்பில் கேட்கப்பட்டுள்ளது. வேண்டாம் என்று சொல்லிவிட்டு டப்பிங்கை தொடர்ந்துள்ளார் உதயநிதி.