Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நிபுணன் அர்ஜுனின் 150 வது படமாக அறிவிப்பு

09 மே, 2017 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Nipunan-announced-as-Arjuns-150th-film

பேஷன் ஸ்டூடியோ சார்பில் அருண் வைத்தியநாதன், தன் நண்பர்களுடன் இணைந்த தயாரிக்கும் படம் நிபுணன். அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, சுஹாசினி நடித்துள்ளனர். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் நடந்து முடிந்திருக்கிறது. தற்போது நிபுணன் படத்தை அர்ஜுனின் 150 படமாக அறிவித்துள்ளார்கள். இதுபற்றி இயக்குனரும் தயாரிப்பாளருமான அருண் வைத்தியநாதன் கூறியதாவது:


அர்ஜுன் சாரின் 150 படமாக நிபுணன் படத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இதனை டீஸர் மூலமாக கொண்டாட இருக்கிறோம். பல ஆண்டுகள் நிறைந்த அவரது உன்னத உழைப்பையும், சீரிய முயற்சியையும் நாங்கள் பாராட்ட கடமைப்பட்டு இருக்கிறோம். கற்பனைக்கும் எட்டாத விதத்தில் தன்னுடைய பணியில் அறிவாற்றலினாலும், கடும் உழைப்பினாலும் உயர பறக்கும் ஒரு சாதனையாளனின் கதை தான் நிபுணன். நமது நாட்டை உலுக்கிய ஒரு மிக முக்கிய சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதைதான் "நிபுணன்". என்கிறார் இயக்குனர் அருண் வைத்தியநாதன்.


Advertisement
அவலாஞ்சி பனிப் புயலில் சிக்கி தப்பினோம்: ரங்கா தயாரிப்பாளர் தகவல்அவலாஞ்சி பனிப் புயலில் சிக்கி ... நடிகர் சபரீஷ் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து நடிகர் சபரீஷ் திருமணம்: ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Sakka Podu Podu Raja
    Tamil New Film Kodiveeran
    • கொடிவீரன்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : மகிமா ,சனுஷா
    • இயக்குனர் :முத்தையா
    Tamil New Film Pakka
    • பக்கா
    • நடிகர் : விக்ரம் பிரபு
    • நடிகை : நிக்கி கல்ராணி ,பிந்து மாதவி
    • இயக்குனர் :எஸ்.எஸ்.சூர்யா
    Tamil New Film Nimir
    • நிமிர்
    • நடிகர் : உதயநிதி ஸ்டாலின்
    • நடிகை : பார்வதி நாயர்
    • இயக்குனர் :ப்ரியதர்ஷன்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in