புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
'பாகுபலி 2' படம் போல ஒரு படம் தமிழில் உருவாகுமா என இங்குள்ள ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு முயற்சியை இயக்குனர் சுந்தர்.சி எடுத்து வருகிறார். அவருடைய இயக்கத்தில், ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, ஜெயம் ரவி, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க 'சங்கமித்ரா' படம் உருவாகப் போகிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கெனவே வெளியாகிவிட்டது.
காமெடி, கமர்ஷியல் படங்களை மட்டும்தான் சுந்தர்.சி இயக்கியிருக்கிறார் என்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி. ஆஸ்கர் விருதுகளை வென்று தன்னைக் கவர்ந்த படங்களுக்கு மட்டுமே இசையமைக்கும் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைக்க சம்மதித்ததில் இருந்தே சுந்தர்.சி எப்படிப்பட்ட கதையை சொல்லி அசத்தியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
'சங்கமித்ரா' படத்தின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு பகுதியை 'சங்கமித்ரா' குழுவினர் ஸ்பான்சர் செய்துள்ளதாகத் தகவல். அன்று ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் சுந்தர்.சி, தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
உலகப் புகழ் வாய்ந்த ஒரு திரைப்பட விழாவில் 'சங்கமித்ரா' படம் ஆரம்பமாவதில் இருந்தே படம் எப்படிப்பட்ட தரத்தில் உருவாகப் போகிறது என்பதை திரையுலகத்தினருக்கும் 'சங்கமித்ரா' குழுவினர் உணர்த்தப் போகிறார்கள்.