Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேவசேனா வாய்ப்பு முதலில் தட்டியது நயன்தாரா வீட்டு கதவைத்தான்..!

08 மே, 2017 - 17:37 IST
எழுத்தின் அளவு:
Nayanthara-first-roped-for-Devasena-role

'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் அனுஷ்கா, தமன்னா என இரண்டு முன்னணி ஹீரோயின்கள் நடித்திருந்தாலும் முதல் பாகத்தில் தமன்னாவுக்கும் இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவுக்கும் சமமான அளவு முக்கியத்துவத்தை ஒதுக்கியிருந்தார் இயக்குனர் ராஜமௌலி.. ஆனாலும் முதல் பாக தமன்னாவை விட, இரண்டாம் பாகத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்கா ரசிகர்களின் மனதில் நின்றுவிட்டார்.. அந்த கேரக்டருக்கு தனது மேம்பட்ட நடிப்பால் அனுஷ்காவை விட வேறு யாரும் சரியாக பொருந்தியிருக்க முடியாது என்றே என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள்..


சரி.. இதே தேவசேனா கதாபாத்திரத்தில் ஒருவேளை நயன்தாரா நடித்திருந்தால்..? இந்த கேள்விக்கான பதிலை வேண்டுமானால் நாமாக கற்பனை பண்ணத்தான் வேண்டுமே தவிர, இந்த கேள்வி உண்மை தான்.. ஆம்.. பாகுபலி பட ஸ்கிரிப்ட் தயாரானதும் தேவசேனா வேடத்தில் நடிக்க இயக்குனர் ராஜமௌலி முதலில் நினைத்தது நயன்தாராவைத்தானாம்.. ஆனால் அந்த சமயத்தில் நயன்தாரா கைநிறைய படங்களுடன் பிஸியாக இருந்ததால் அவரால் ராஜமௌலி கேட்ட தேதிகளை ஒதுக்க முடியாமல் போயிற்றாம். நயன்தாராவின் இழப்பு அனுஷ்காவின் லாபமாக மாறிவிட்டது.. இதேபோலத்தான் சிவகாமி கேரக்டரில் ஸ்ரீதேவி நடிக்க இருந்து அதேபோல தேதிகள் பிரச்சனையால் ரம்யா கிருஷ்ணனுக்கு அந்த வாய்ப்பு மாறியதும் நாம் ஏற்கனவே அறிந்த ஒன்று.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in