தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'பாகுபலி' படத்தில் அரண்மனை வடிவமைப்பு, போர்க்கருவிகள் என கலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அனைத்தும் பிரமிப்பூட்டும் விதமாக இருந்ததை மறுப்பதற்கில்லை. ராஜா காலத்தை பற்றி நாம் படித்து கேள்விப்பட்டதை கண்முன் பார்க்கும்போது ஒருவேளை அந்தக்காலத்தில் இப்படித்தான் இருந்திருக்குமோ என்கிற நம்பகத்தன்மையை ஏற்படுத்தின. அதிலும் குறிப்பாக பல்வாள் தேவனாக நடித்திருந்த ராணா போருக்கு செல்வதற்காக பயன்படுத்தும் அந்த ரதம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து விட்டது..
இரண்டு எருதுகள் வண்டியை இழுக்க, முன்னாள் நான்கு கூர்மையான வளைந்த கத்திகளுடன் சுழன்றுகொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் அந்த ரதம் பார்ப்பதற்கே வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. படப்பிடிப்பின்போது அந்த ரதத்தை செலுத்துவதற்காக அதில் ராயல் என்பீல்டு என்ஜினை பொறுத்தி இருந்தார்களாம். அதுமட்டுமல்ல அந்த ரதத்தை ஓட்டுவதற்கு கார்போல ஸ்டியரிங்கும் கூடவே பொறுத்தப்பட்டு அதை ஒரு ஓட்டுனர் செலுத்த ராணா பின்னிருந்து அதை செலுத்துவது போல காட்சிகளை படமாக்கினார்களாம்.. பின்னர் அந்த ட்ரைவர் உள்ளிட்ட பகுதிகளை கிராபிக்ஸ் உதவியால் அகற்றி, எருதுகள் ரதத்தை இழுப்பதுபோல மாற்றினார்களாம்.